இயற்கை எரிவாயுவில் இயங்கும் கார்கள்: வோக்ஸ்வேகன் முடிவு

ஜெர்மனியை சேர்ந்த வோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் பிரிமியம் ரக பிராண்டு என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது.ஆனால், பிற நிறுவனங்களை ஒப்பிடும்போது அதிக கார் மாடல்கள் இல்லாததும், சர்வீஸ் வசதியில் வாடிக்கையாளர் திருப்தியை பெறாததாலும் அந்த நிறுவனத்தின் விற்பனை மெல்ல சரிய துவங்கியுள்ளது.
இதனால், கவலையடைந்துள்ள வோக்ஸ்வேகன் நிறுவனம் தன் மீதுள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் நடவடிக்கைகளை துவங்கியுள்ளது. மேலும், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இயற்கை எரிவாயுவில் இயங்கும் போலோ மற்றும் வென்ட்டோ மாடல்களை விற்பனைக்கு கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளது.
பெட்ரோல் கார்களை விட சிஎன்ஜியில் இயங்கும் கார்களின் எரிபொருள் செலவீனம் குறைவாக இருக்கும் என்பதால், இதுகுறித்து அந்த நிறுவனம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இதன்மூலம், தனது விற்பனை சரிவை ஓரளவு தடுத்து நிறுத்த முடியும் என்று வோக்ஸ்வேகன் நம்புகிறது.


Click it and Unblock the Notifications








