5 லட்சத்தில் புதிய காம்பெக்ட் செடான் கார்: போக்ஸ்வேகன் திட்டம்

4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட காம்பெக்ட் செடான்(சிஎஸ்) கார்களுக்கான வரவேற்பு கூடி வருகிறது. வரிச்சலுகை கிடைப்பதால் விலையும் குறைவாக நிர்ணயிக்க முடிவதால், அனைத்து முன்னணி நிறுவனங்களும் காம்பெக்ட் செடான் கார்களை களமிறக்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றன.
மஹிந்திரா, டாடா உள்ளிட்ட நிறுவனங்கள் விரைவில் புதிய காம்பெக்ட் செடான் கார்களை களமிறக்க திட்டமிட்டுள்ளன. இந்த வரிசையில், போக்ஸ்வேகன் நிறுவனமும் இணைய உள்ளது. புதிய காம்பெக்ட் செடான் காரை அறிமுகப்படுத்த உள்ளதாக போக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தின் தலைவர் சூசகமாக தெரிவித்துள்ளார்.
இநத புதிய கார் போக்ஸ்வேகன் நிறுவனத்தின் புத்தம் புதிய அப் ஹேட்ச்பேக் கார் பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட உள்ளது. மேலும், இந்த புதிய காருக்கு இஏ என்ற குறியீட்டு பெயரில் புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சினையும் போக்ஸ்வேகன் உருவாக்கி வருகிறது.
ரூ.5 லட்சத்தில் இந்த புதிய கார் விற்பனைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய கார் எப்போது விற்பனைக்கு வரும் என்பது உள்ளிட்ட விபரங்களை போக்ஸ்வேகன் படு ரகசியமாக வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications








