புதிய பவர்ஃபுல் எஞ்சினை போலோவில் பொருத்தும் போக்ஸ்வேகன்

Volkswagen Polo
போலோ ஹேட்ச்பேக் காருக்கு அதிக திறன் கொண்ட புதிய எஞ்சினை பொருத்த போக்ஸ்வேகன் முடிவு செய்துள்ளது.

சிறந்த பிரிமியம் ஹேட்ச்பேக் காராக வலம் வரும் போக்ஸ்வேகனின் போலோ பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், போலோ காரின் டீசல் மாடலில் தற்போது 3 சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 75 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.

இந்த நிலையில், டீசல் போலோ காரின் பெர்ஃபார்மென்ஸ் போதவில்லை என்ற மனக்குறை வாடிக்கையாளர்களிடம் பரவலாக இருக்கிறது. இதனை போக்கும் விதமாக புதிய பவர்ஃபுல் எஞ்சினை போலோவில் பொருத்த போக்ஸ்வேகன் முடிவு செய்துள்ளது.

இதற்காக, 4 சிலிண்டர்கள் கொண்ட புதிய 1.5 லிட்டர் எஞ்சினை போலோவில் பொருத்தப்பட உள்ளது. மேலும், வென்ட்டோவில் பொருத்தப்பட்டிருக்கும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சினை 1.5 லிட்டர் எஞ்சினாக மாற்றி போலோவில் பொருத்தப்பட உள்ளதாக போக்ஸ்வேகன் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

இதன்மூலம், ஐ20 மற்றும் ஃபியட் புன்ட்டோ 90 வேரியண்ட் கார்களுக்கு இணையாக பவர்ஃபுல் காராக போக்ஸ்வேகன் போலோ மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்ட போலோ கார் 2014ம் ஆண்டில்தான் மார்க்கெட்டுக்கு வரும் என தெரிகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, October 6, 2012, 11:34 [IST]
English summary
Volkswagen polo's future buyers, have something to cheer about. The company has officially announced, that it would introduce a 1.5 litre diesel engine for the polo. However, you have to wait till 2014.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+