குறைந்த விலை காரை அறிமுகப்படுத்தும் திட்டம் இல்லை: வோக்ஸ்வேகன்

Volkswagen UP
இந்தியாவில் குறைந்த விலை காரை அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை என்று வோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது. மேலும், குறைந்த விலை காரை அறிமுகப்படுத்தினால் தனது பிராண்டு மதிப்பு குறைய வாய்ப்புள்ளதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த வோக்ஸ்வேகன் குழுமம் இந்திய மார்க்கெட்டில் மிதமான வளர்ச்சியை பெற்று வருகிறது. தனது துணை நிறுவனங்களான ஸ்கோடா, ஆடி உள்ளிட்ட நிறுவனங்களின் வோக்ஸ்வேகன் விற்பனை வளர்ச்சிக்கு உதவி புரிந்து வருகின்றன.

இந்த நிலையில், இந்திய மார்க்கெட்டில் சிறிய கார்களின் விற்பனை முக்கிய பங்கு வகிப்பதால், ரூ.4 லட்சம் விலையில் சிறிய காரை அறிமுகப்படுத்த வோக்ஸ்வேகன் ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் தெரிவித்தன.

கடந்த ஆண்டு பிராங்க்பர்ட் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்பட்ட அப் காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாகவும் கூறப்பட்டன. இதுதவிர, இதே காரை ஸ்கோடா ஆட்டோ பிராண்டிலும் சிட்டிகோ என்ற பெயரில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர வோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.

ஆனால், இந்த தகவல்களை வோக்ஸ்வேகன் தற்போது திட்டவட்டமாக மறுத்துள்ளது. குறைந்த விலை கார் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்துவற்கான திட்டம் எதுவும் தற்போது இல்லை என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.

தவிர, இந்தியாவில் தங்களது பிராண்டுக்கு தனி மதிப்பு இருப்பதாகவும், குறைந்த விலை காரை அறிமுகம் செய்தால் பிராண்டு மதிப்பு குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாக கருதுவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த 3 ஆண்டுகளுக்கு குறைந்த விலை கார் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான வாய்ப்பு இல்லை என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 6, 2012, 14:57 [IST]
English summary
Germany largest car maker Volkswagen has postponed to enter the small car for Indian market. Volkswagen group thinking low cost car segment will impact the company's brand image.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+