டைகுன் காம்பெக்ட் எஸ்யூவியை காட்சிப்படுத்திய போக்ஸ்வேகன்

டைகுன் என்ற பெயரில் புதிய கான்செப்ட் மாடல் காம்பெக்ட் எஸ்யூவி காரை பிரேசிலில் உள்ள சாவ் பாவ்லோவில் நடந்து வரும் ஆட்டோ ஷோவில் போக்ஸ்வேகன் அறிமுகம் செய்துள்ளது. உலக அளவில் காம்பெக்ட் எஸ்யூவி ரக கார்களுக்கு புது மவுசு கிடைத்துள்ளது. இதை கருத்தில்க் கொண்டே இந்த புதிய எஸ்யூவி கான்செப்ட்டை போக்ஸ்வேகன் பார்வைக்கு அறிமுகம் செய்துள்ளது. பார்வையாளர்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து உற்பத்தி நிலைக்கு கொண்டு செல்ல போக்ஸ்வேகன் முடிவு செய்துள்ளது.

ரெனோ டஸ்ட்டர், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காம்பெக்ட் ரக எஸ்யூவிகளுக்கு நேரடி போட்டியாளராக இருக்கும். காம்பெக்ட் எஸ்யூவிகளுக்கு நம் நாட்டு மார்க்கெட்டில் ஏக மவுசு இருப்பதால் இந்தியா வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இந்த எஸ்யூவியின் இதர விபரங்கள் மற்றும் பிரத்யேக படங்களை ஸ்லைடரில் காணலாம்.

டைகுன் கான்செப்ட்

டைகுன் கான்செப்ட்

அப் ஹேட்ச்பேக் காரின் பிளாட்பார்மில்தான் இந்த புதிய மினி எஸ்யூவி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. எல்இடி விளக்குகள் கூடுதல் அம்சமாக இருக்கிறது

வடிவமைப்பு

வடிவமைப்பு

3.86 மீட்டர் நீளமும், 1.73 மீட்டர் அகலமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 4 மீட்டருக்கும் குறைவாக இருப்பதால் இந்தியா வந்தால் வரிச்சலுகை கிடைக்கும். பார்த்தவுடன் போக்ஸ்வேகன் வடிவமைப்பை நினைவுகூறும் அம்சங்கள் ஏராளம். தவிர, எஸ்யூவி கார்களுக்கான பிரத்யேக அடையாளங்கள் வெளிப்புறத்தில் அதிகம் தெரிகின்றன.

அசத்தும் இன்டிரியர்

அசத்தும் இன்டிரியர்

அசத்தலான இன்டிரியரை கொண்டிருக்கிறது. இதன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் பல்வேறு பொழுதுபோக்கு மற்றும் வழிகாட்டும் வசதிகளை வழங்கும். பெரும்பாலான ஸ்மார்ட்போன்களோடு இதனை எளிதாக இணைக்க முடியும்.

முன்வரிசை

முன்வரிசை

முன்வரிசை 1086 மிமீ ஹெட்ரூம் இருப்பதால் உயரமானவர்கள் கூட தாராளமான இடவசதியை அனுபவிக்க முடியும்

இருக்கை வசதி

இருக்கை வசதி

5 பேர் செல்லும் வசதிகொண்டதாக இருக்கும். வழக்கமான மினி எஸ்யூவி மாடல்களை விட சற்று அகலம் கூடுதலாக இருப்பதால் பின் வரிசையில் அமர்பவர்களுக்கு கூடுதல் சவுகரியத்தை உணரலாம்.

எஞ்சின்

எஞ்சின்

3 சிலிண்டர்கள் கொண்ட 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். டர்போசார்ஜர்கள் உதவியுடன் இந்த எஞ்சின் 110 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். 6 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டிருக்கும். மணிக்கு 186 கிமீ வேகத்தில் செல்லும்.

More from DriveSpark

Article Published On: Thursday, October 25, 2012, 14:55 [IST]
English summary
Volkswagen has unveiled its latest concept, an SUV based on the diminutive platform of the Up city car.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+