போக்ஸ்வேகன் அப் இந்தியா வருவது உறுதி: புனேயில் சோதனை

ஐரோப்பிய மார்க்கெட்டில் கடந்த ஆண்டு விற்பனைக்கு வந்தது அப். இந்த சிறிய ரக காரை இந்தியா உள்ளிட்ட மார்க்கெட்டுகளில் அறிமுகப்படுத்த போக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது.
அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த கார் வர இருப்பதாக யூகத் தகவல்கள் றெக்கை கட்டி பறந்து வருகின்றன. ஆனால், சரியான விபரங்களை இதுவரை போக்ஸ்வேகன் வெளியிடவில்லை. இதனால், அப் வருவது ஒருபக்கம் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அப் கார் இந்தியா வருவது உறுதியாகியுள்ளது. இந்த புத்தம் புதிய ஹேட்ச்பேக் காரை புனே அருகில் போக்ஸ்வேகன் சோதனை நடத்தியபோது கேமரா கண்ணில் சிக்கியுள்ளது.
ஏற்கனவே டெல்லியில் அப் கார் சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், மீண்டும் அப் கார் தீவிர சோதனைகள் நடத்தப்படுவதால் விரைவி்ல் இந்தியா வருவது உறுதியாகியிருக்கிறது.
இந்த புதிய கார் ரூ.3 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் வரும் இந்த கார் மாருதி விரைவில் அறிமுகப்படுத்த இருக்கும் ஆல்ட்டோ 800 மற்றும் ஹூண்டாய் இயான் உள்ளிட்ட கார்களுக்கு போட்டியை கொடுக்கும் என்று கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








