ஆடி க்யூ3 எஸ்யூவிக்கு போட்டியாக வரும் வால்வோ கார்

வால்வோ எக்ஸ்சி 60
ஆடி க்யூ3 கிராஸ்ஓவர் எஸ்யூவிக்கு போட்டியாக புதிய காரை வால்வோ அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

நம் நாட்டு சொகுசு பஸ் மார்க்கெட்டில் கொடி கட்டி பறக்கும் வால்வோ, கார் மார்க்கெட்டிலும் முதல் மூன்று இடங்களுக்குள் வர வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

இதற்காக, தனது எக்ஸ்சி 40 கிராஸ்ஓவர் ஸ்போர்ட்ஸ் வேகன் காரை களமிறக்க திட்டமிட்டுள்ளது. ரூ.22 லட்சம் முதல் ரூ.35 லட்சம் இடைபட்ட விலையில் வர இருக்கும் இந்த புதிய கார் நிச்சயம் என்ட்ரி லெவல் சொகுசு கார் மார்க்கெட்டில் சிறிது சலசலப்பை ஏற்படுத்தலாம்.

மேலும், ஆடி க்யூ3 மற்றும் பிஎம்டபிளம்யூ எக்ஸ்1 ஆகிய கிராஸ்ஓவர் எஸ்யூவி மாடல்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. மேலும், பெட்ரோல் மற்றும் டீசலில் வரும் என்பதால் வாடிக்கையாளர்கள் குழப்பம் இல்லாமல் வால்வோ ஷோரூம்களுக்கு செல்ல முடியும்.

ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடலும் கிடைக்கும் என்பதால் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக இந்த புதிய கார் இருக்கும். அடுத்த ஆண்டு மத்தியில் இந்த புதிய கிராஸ்ஓவர் காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Monday, July 30, 2012, 11:19 [IST]
English summary
Sweden Luxury car maker Volvo is planning to launch New crossover SUV car in Indian market to take on Audi Q3 and BMW X1. The new crossover will be available in Petrol and Diesel engine options, reports says.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+