இயற்கை எரிவாயுவில் இயங்கும் சிட்டி பஸ்: வால்வோ களமிறக்குகிறது

பயணிகள் போக்குவரத்தில் வால்வோ நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, நகரங்களில் இயக்கப்படும் சிட்டி பஸ் மற்றும் நகரங்களுக்கிடையிலான இன்டர்சிட்டி பஸ் மார்க்கெட்டில் வால்வோ முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த நிலையில், பல முன்னணி நிறுவனங்களும் வால்வோ மார்க்கெட்டை உடைக்க பல புதிய மாடல்களை களமிறக்கி வருகின்றன. இதனால், நம் நாட்டு பஸ் மார்க்கெட் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நெருதுளி பறக்கிறது.
இந்த நிலையில், நெருக்கடிகளை சமாளித்து தனது மார்க்கெட்டை பலப்படுத்திக்கொள்ள வால்வோ முடிவு செய்துள்ளது. இதற்காக, பல புதிய மாடல்களை இந்த ஆண்டு வால்வோ அறிமுகப்படுத்துகிறது.
முதலில் இயற்கை எரிவாயுவில் இயங்கும் புதிய சிட்டி பஸ்சை வால்வோ அறிமுகப்படுத்த உள்ளது. டெல்லி மற்றும் மும்பை நகரங்களில் இந்த பஸ் தற்போது சோதனை அடிப்படையில் இயக்கி பார்க்கப்பட்டு வருகிறது.
பயணிகளிடமிருந்து இந்த பஸ்சுக்கு சாதகமான கருத்துக்கள் வந்துள்ளதால் வரும் மூன்றாவது காலாண்டில் வர்த்தக ரீதியில் இந்த பஸ் அறிமுகம் செய்ய வால்வோ திட்டமிட்டுள்ளது. இந்த புதிய சிஎன்ஜி பஸ்கள் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கும் வகையில் இருக்கும்.
மேலும், இந்த பஸ்கள் எளிதில் தீப்பிடிக்காத வகையில், அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்டிருக்கிறது. எரிவாயு நிரப்பும்போது இதன் எஞ்சின் தானாக அணைந்து விடும். மேலும், பிரேக், எஞ்சின் உள்ளிட்டவற்றில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால், அதுகுறித்து எச்சரிக்கை செய்யும் வசதிகளும் இதில் உண்டு.
பெங்களூரில் உள்ள வால்வோ பஸ் தொழிற்சாலையில் இந்த புதிய பஸ்களின் உற்பத்தி தற்போது துவங்கப்பட உள்ளது. இருப்பினும், இதுவரை டெல்லி மற்றும் மும்பை மாநகர போக்குவரத்து கழகங்களிடமிருந்து வால்வோவுக்கு ஆர்டர் எதுவும் வரவில்லை. ஆனால், விரைவில் ஆர்டர் கிடைக்கும் என்று வால்வோ நம்பிக்கை தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








