விலையை குறைத்து 3 கார்களை களமிறக்கிய வால்வோ

Volvo S60
முந்தைய மாடல்களை விட குறைவான விலையில் 3 புதிய சொகுசு கார்களை வால்வோ அறிமுகம் செய்துள்ளது.

ஸ்வீடனை சேர்ந்த வால்வோ நிறுவனம் இந்தியாவில் பஸ் தயாரிப்பில் பிரபலமான நிறுவனமாக திகழ்கிறது. மேலும், சொகுசு கார் தயாரிப்பிலும் வால்வோ புகழ்பெற்றது. அந்த நிறுவனத்தின் கார்கள் உலகிலேயே அதிக பாதுகாப்பு வசதிகள் கொண்ட கார்கள் என்ற நன் மதிப்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், இந்தியாவில் சொகுசு மார்க்கெட்டில் இருக்கும் போ்ட்டியை கருத்தில்க்கொண்டும், வாடிக்கையாளர்களை தன் பக்கம் இழுக்கும் விதமாகவும் 3 புதிய மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் எஸ்60, எஸ்80 மற்றும் எக்ஸ்சி 60 எஸ்யூவி ஆகியவற்றில் டி3 எஞ்சினை பொருத்தி தற்போது குறைந்த விலையில் அறிமுகம் செய்துள்ளது வால்வோ.

இந்த கார்களை ரூ.27 லட்சம் முதல் ரூ.39.5 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்து வந்த வால்வோ டி3 எஞ்சினுடன் அறிமுகப்படுத்திய வேரியண்ட்கள் ரூ.23.5 லட்சம் முதல் ரூ.35.9 லட்சம் விலையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த புதிய கார் மாடல்கள் மூலம் இந்திய சொகுசு மார்க்கெட்டில் வேகமான விற்பனை வளர்ச்சியை பெற முடியும் என்று வால்வோ கருதுகிறது.

இந்த புதிய கார் மாடல்கள் ஸ்வீடனிலுள்ள தனது கார் ஆலையில் உற்பத்தி செய்து இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட இருப்பதாக வால்வோ தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, February 16, 2012, 12:33 [IST]
English summary
Volvo, the Swedish carmaker has launched three new variants of its models that are priced much lower than their predecessors. Volvo has taken on its competitors head on by offering its products at a much lower price despite selling all its models as CBUs (Completely Built Units). CBUs attract more excise tax than cars that are assembled within India.Volvo's models in India include the S60 and S80 sedans and the XC60 SUV. The current model range is priced between Rs.23.2 lakhs and Rs35.9 lakhs (ex showroom, Delhi). However the previous models were priced between Rs.27 lakhs and Rs.39.5 lakhs.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+