ஆண்டுக்கு ஒரு புதிய கார்: வால்வோவின் அதிரடி திட்டம்

ஆடி, பிஎம்டபிள்யூ, பென்ஸ் கையில் தற்போது சொகுசு கார் மார்க்கெட் இருக்கிறது. இந்த மார்க்கெட்டில் புதிய போட்டியாளர்கள் எளிதில் உள்ளே நுழைந்து விட முடியாத அளவுக்கு ஜெர்மன் நிறுவனங்கள் கோட்டை கட்டி வைத்துள்ளன.
இந்த நிலையில், 3 நிறுவனங்களின் மார்க்கெட்டை உடைத்து தன்னையும் சொகுசு கார் மார்க்கெட்டில் அடையாளப்படுத்திக் கொள்ள தீவிர திட்டங்களை தீட்டி வருகிறது வால்வோ.
இந்த புதிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்து சமீபத்தில் வால்வோவின் உயர்மட்ட கூட்டம் ஒன்றும் நடந்துள்ளது. இதில், அந்த நிறுவனத்தின் 50 மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
இந்தியாவிலேயே கார்களை அசெம்பிள் செய்து விற்பனை செய்யவும் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டது. பிஎம்டபிள்யூ எக்ஸ்1 மற்றும் ஆடி க்யூ3 எஸ்யூவி மாடல்களின் மார்க்கெட்டை உடைக்கும் வகையில் புதிய கிராஸ்ஓவர் ரக காரை அறிமுகப்படுத்தவும் பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளது.
அதாவது ஆண்டுக்கு ஒரு புதிய கார் என்ற ரேஞ்சில் செல்ல வால்வோ திட்டமிட்டுள்ளது. டெல்லி, பெங்களூர் மற்றும் ஆமதாபாத்தில் புதிய ஷோரூம்களை வால்வோ திறக்கிறது. டீலர் எண்ணிக்கையை அதிகரித்த பின் புதிதாக 5 கார் மாடல்களை வால்வோ அறிமுகப்படுத்த உள்ளது.


Click it and Unblock the Notifications








