அடுத்த ஆண்டு வால்வோ களமிறக்கும் பிரிமியம் ஹேட்ச்பேக் கார்

அடுத்த ஆண்டு வி40 கிராஸ் கன்ட்ரி ஹேட்ச்பேக் காரை இந்திய மண்ணில் களமிறக்கவிட வால்வோ முடிவு செய்துள்ளது. பிஎம்டபிள்யூ எக்ஸ்-1, ஆடி க்யூ 3 ஆகிய கார்களுக்கு இது கடும் போட்டியை கொடுக்கும்.

சமீபத்தில் நடந்த பாரீஸ் மோட்டார் ஷோவில்தான் இந்த புதிய காரை வால்வோ அறிமுகப்படுத்தியது. இதைத்தொடர்ந்து, இந்த காரை விற்பனைக்கு கொண்டு வரும் திட்டங்களை முடுக்கி விட்டுள்ளது. இந்த கார் அறிமுகம் செய்யப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் என இரு மாடல்களிலும் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய கார் சர்வதேச அளவில் 6 விதமான டர்போசார்ஜர்கள் கொண்ட எஞ்சின்களுடன் வால்வோ களமிறக்குகிறது. இதில் 3 பெட்ரோல் எஞ்சின்களும், 3 டீசல் எஞ்சின்களுமாக இருக்கும்.

இதில், டி3(T3), டி4 (T4)மற்றும் டி5(T5) ஆகிய பெட்ரோல் வேரியண்ட்களிலும், டி2(D2), டி3(D3) மற்றும் டி4(D4) வேரியண்ட்களிலும் கிடைக்கும். இதில், டி3, டி4 ஆகிய வேரியண்ட்கள் 6 ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடனும், டி5 6 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வேரியண்ட்டாகவும் இருக்கும்.

எஞ்சின்கள்

பெட்ரோல்:

டி3 வேரியண்ட்டில் 150 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் எஞ்சினும், டி4 வேரியண்ட்டில் 180 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் எஞ்சினும், டி5 டாப் வேரியண்ட்டில் 254 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் எஞ்சினும் பொருத்தப்பட்டிருக்கும்.

டீசல்:

டி2 வேரியண்ட்டில் 115 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் டீசல் எஞ்சினும், டி3 வேரியண்ட்டில் 150 பிஎ:்பி ஆற்றலை வெளிப்படுத்தும் எஞ்சினும், டி4 வேரியண்ட்டில் 177 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் எஞ்சினுடனும் வர இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Monday, October 29, 2012, 15:22 [IST]
English summary
Sweden Luxury car maker Volvo is planning to launch New crossover SUV car in Indian market to take on Audi Q3 and BMW X1. The new crossover car will be available in Petrol and Diesel engine options, reports says.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+