இந்தியாவில் கார் அசெம்பிளிங் ஆலை அமைக்க வால்வோ திட்டம்

தற்போது ஸ்வீடனிலுள்ள தனது ஆலையிலிருந்து நேரடியாக கார்களை இறக்குமதி செய்து விற்பனை செய்வதால் அதிகப்படியான வரியால் பிற நிறுவனங்களின் தயாரிப்புகளுடன் போட்டி போட முடியவில்லை.
மார்க்கெட்டில் பின்தங்கியிருக்கும் அந்த நிறுவனம், சொகுசு கார் மார்க்கெட்டில் முதல் 5 இடங்களுக்குள் வர வேண்டும் என்று கணக்கு போட்டுள்ளது. இதனை அடைவதற்கு சரியான விலையில் தனது தயாரிப்புகளை விற்பனை செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொண்டுள்ளது.
இதையடுத்து, இந்தியாவிலேயே புதிய அசெம்பிளிங் ஆலையை அமைப்பதற்கு அந்த நிறுவனம் முடிவு செய்திரு்பபதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம், இறக்குமதி வரியை தவிர்க்க முடியும் என்பதோடு, விற்பனை கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும் என அந்த நிறுவனம் திட்டம் போட்டுள்ளது.
மேலும், அடுத்த ஆண்டு புதிய மாடல்களையும் அறிமுகப்படுத்த இருக்கிறது வால்வோ. வரும் 2020ம் ஆண்டுவாக்கில் ஆண்டுக்கு 20,000 கார்களை இந்திய மார்க்கெட்டில் விற்பதே அந்த நிறுவனத்தின் தற்போதைய லட்சியமாக இருக்கிறது.
எக்ஸ்சி 90, எக்ஸ்சி60 ஆகிய எஸ்யூவி மாடல்களையும், எஸ்60 மற்றும் எஸ்80 செடான் கார்களையும் இந்திய மார்க்கெட்டில் வால்வோ விற்பனை செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications








