ரூ.2000 கோடியில் குஜராத்தில் புதிய ஆலை: போக்ஸ்வேகன் திட்டம்

Volkswagen Logo
ரூ.2000 கோடி முதலீடு மஹாராஷ்டிராவின் கையை விட்டு போகிறது. குஜராத்தில் புதிய ஆலை கட்டுவதற்கான முயற்சிகளை போக்ஸ்வேகன் மேற்கொண்டுள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த போக்ஸ்வேகன் நிறுவனம் மஹாராஷ்டிராவில் உள்ள சகன் மற்றும் அவுரங்காபாத்தில் ஆலைகள் அமைத்து கார் உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த கட்ட விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதற்காக, குஜராத்தில் புதிய ஆலை கட்டுவதற்கான சாதக பாதகங்கள் குறித்து ஆராய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அகமதாபாத் அல்லது வதோதராவில் புதிய ஆலை கட்டுவது குறித்து அந்த நிறுவனம் இடத்தை தேர்வு செய்யும் பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

அரசுக்கு செலுத்தப்படும் மதிப்பு கூட்டு வரியில், சலுகை அடிப்படையில் திருப்பித் தர வேண்டிய தொகையை தருவதில் மஹாராஷ்டிர அரசு இழுத்தடிப்பதால் போக்ஸ்வேகன் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மஹாராஷ்டிர அரசு சலுகை அடிப்படையில் திருப்பித் தரவேண்டிய தொகையை தராமல் இழுத்தடிப்பதாக ஏற்கனவே பஜாஜ் ஆட்டோ புகார் கூறி வருகிறது. மேலும், புதிய ஆலையை மஹாராஷ்டிராவில் கட்டப் போவதில்லை என்றும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 23, 2012, 15:51 [IST]
English summary
German auto major Volkswagen is reportedly exploring the possibilities of setting up a manufacturing facility in Gujarat. The company has put on hold it's Rs 2,000 crore investment plan in Maharashtra.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+