ஓல்டு ஸ்டாக் கார்களுக்கு ஒரு லட்சம் தள்ளுபடி வழங்கும் வோக்ஸ்வேகன்

பெட்ரோல் விலை உயர்வு காரணமாக கடந்த ஓர் ஆண்டாக பெட்ரோல் கார்களுக்கு மார்க்கெட்டில் பவுசு போய்விட்டது. தற்போது டீசல் கார்களுக்குத்தான் மவுசு உள்ளது. இதனால், பெட்ரோல் கார்களை விற்க கார் நிறுவனங்கள் படாத பாடு படுவதுடன் ஏற்கனவே உற்பத்தி செய்து விற்பனையாகாமல் தங்கியிருக்கும் கார்களுக்கு ஏராளமான சலுகைகளை அறிவித்து வருகின்றன.
அந்த வகையில், கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்டு இதுவரை போனியாகாமல் டீலர்களில் தங்கியிருக்கும் போலோ மற்றும் வென்ட்டோ பெட்ரோல் கார்களுக்கு ரூ.ஒரு லட்சம் வரை விலையில் தள்ளுபடி வழங்குவதாக வோக்ஸ்வேகன் அறிவித்துள்ளது.
போலோ காருக்கு விலையில் ரூ.50,000 தள்ளுபடியும், ரூ.60,000 மதிப்புடைய 2 ஆண்டு்க்கான கார் பராமரிப்பு உள்பட ரூ.1.10 லட்சம் மதிப்புக்கு தள்ளுபடி சலுகையை வோக்ஸ்வேகன் வழங்குகிறது. மேலும், வென்ட்டோ காருக்கு இலவச இன்ஸ்யூரன்ஸ் மற்றும் ரூ.60,000 மதிப்புடைய பராமரிப்பு திட்டத்தை வழங்குகிறது.


Click it and Unblock the Notifications








