ஜெனரல் மோட்டார்சில் ரூ.1,300 கோடி முதலீடு செய்த வாரன் பஃபட்

அமெரிக்க கார் நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் உலகின் முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. செவர்லே, ஓபல், கேடில்லாக் உள்ளிட்ட பல பிராண்டுகளில் ஏராளமான கார் மாடல்களை ஜெனரல் மோட்டார்ஸ் உலகின் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்து வருகிறது.
கடந்த 2008ம் ஆண்டு உலக பொருளாதார சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஜெனரல் மோட்டார்ஸ் திவாலானது. இந்த நிறுவனத்தை மீட்பதற்காக அமெரிக்க அரசு ரூ.1.44 லட்சம் கோடி நிதியுதவி அளித்தது. இதையடுத்து, படிப்படியாக அந்த நிறுவனம் தற்போது வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ளது.
உலகின் வேகமாக வளரும் சீனா உள்ளிட்ட பல்வேறு கார் மார்க்கெட்டுகளில் ஜெனரல் மோட்டார்ஸ் விற்பனை நல்ல வளர்ச்சி கண்டு வருவதால், நிதி சிக்கல்களிலிருந்து அந்த நிறுவனம் தற்போது மீண்டுள்ளது.
இந்த நிலையில், உலகின் மிகப் பெரிய முதலீட்டாளரான ஹாத்வே நிறுவன அதிபர் வாரன் பஃபட் தற்போது ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் 1 கோடி பங்குகளை வாங்கியுள்ளார். இதன் மதிப்பு ரூ.1300 கோடி என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த புதிய முதலீடு மூலம் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் எதிர்கால திட்டங்களை எளிதாகவும், செம்மையாகவும் செயல்படுத்த முடியும் என்று அந்த நிறுவனத்தின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Click it and Unblock the Notifications








