மேற்குவங்கத்தில் கார்களுக்கு வாழ்நாள் வரி: புதிய முறை அமல்

மேற்கு வங்கத்தில் கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் ஆண்டுக்கு ஒரு முறை வரி செலுத்தும் திட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு ஒரு முறை வரி செலுத்தும் முறையில் கார் வாங்கும்போது அதிக தொகையை வாடிக்கையாளர்கள் முதலீடு செய்ய வேண்டியிருக்காது.
இந்த நிலையில், வரி வருவாயை பெரும் நடவடிக்கைகளை மேற்கு வங்கத்தை ஆளும் மம்தா பானர்ஜி அரசு மேற்கொண்டு வருகிறது. இதில், கார்களுக்கு வரி செலுத்தும் முறையிலும் புதிய முறை அமல்படுத்தப்பட உள்ளது.
கார் வாங்கும்போதே வாடிக்கையாளர்கள் இனி மொத்தமாக வரி செலுத்தும் புதிய முறையையும் அம்மாநில அரசு கொண்டு வந்திருக்கிறது. இதனால், அந்த மாநில அரசுக்கு வரி வருவாய் கணிசமாக உயரும் என தெரிகிறது. இந்த புதிய முறைக்கு கார் டீலர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
கார் கடன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு முன்பணமாக செலுத்தும் தொகை அதிகரிக்கும் என்பதால் கார் விற்பனையில் பாதிப்பு ஏற்படும் என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். காரின் விலையில் 10 சதவீதத்தை வாழ்நாள் வரியாக செலுத்த வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், ஆண்டுக்கு ஒரு முறை வரி செலுத்தும் திட்டத்தையும் அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








