3 லட்சம் ஸ்காலர்ஷிப், நானோ காரை வெல்ல கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்பு

நானோ கார் விற்பனையை அதிகரிக்க தொடர்ந்து பல வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது டாடா மோட்டார்ஸ். அந்த வகையில், பாலிவுட் இயக்குனர் கரன் ஜோஹர் இயக்கும் காதலும், காமெடியையும் கருவாக வைத்து இயக்கும் ஸ்டூடன்ஸ் ஆப் தி இயர் படத்தை பிரபலப்படுத்தும் முயற்சிகளுககு நானோ கார் பயன்படுத்தப்பட உள்ளது.
இதற்காக, டாடா மோட்டார்ஸ் அகில இந்திய அளவில் கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு போட்டி ஒன்றை நடத்துகிறது. கல்லூரிகளில் படிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் இந்த போட்டியில் பங்குபெறலாம். இதற்கான, இணையதளத்தில் மாணவர்கள் தங்களது பெயர் மற்றும் விபரங்களை பதிவு செய்துகொள்ளவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 28ந் தேதி வரை மாணவர்கள் பதிவு செய்துகொள்ளலாம். கல்வி, கலாச்சாரம், விளையாட்டு உள்ளிட்ட 4 பிரிவுகளின் அடிப்படையில் மாணவர்களின் சோதிக்கப்பட்டு சுற்றுக்கு 8 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்த மாதம் 8ந் தேதி அறிவிக்கப்படுவர்.
பாலிவுட் நட்சத்திரங்கள் ஏராளமாக பங்கேற்கும் இறுதிச்சுற்று மும்பையில் நடைபெற உள்ளது. பாலிவுட் நட்சத்திரங்களான வருண் தவான், சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் அலியா பட் போட்டி நடுவர்களாக செயல்பட உள்ளனர். தவிர, பார்வையாளர்கள் தரும் வாக்குகளும் கணக்கில் எடுத்துக்கொண்டு இந்த ஆண்டின் சிறந்த மாணவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
இறுதிச் சுற்றில் முதல் இடம் பிடிக்கும் மாணவருக்கு இந்த ஆண்டின் சிறந்த மாணவர் என்ற பட்டமும், பரிசாக நானோ காரும், கூடவே 3 லட்சம் கல்வி ஊக்கத்தொகையாக வழங்கப்பட உள்ளது. இரண்டாவது இடம் பிடிக்கும் மாணவருக்கு ஆப்பிள் மேக்பக் புரோ லேப்டாப்பும் வழங்கப்பட உள்ளது.
இந்த போட்டியில் பங்கேற்க விரும்பும் கல்லூரி மாணவர்கள் கீழ்க்கண்ட இணையதளத்தில் பெயரை பதிவு செய்துகொள்ளலாம்.
www.nanostudentoftheyear.com


Click it and Unblock the Notifications








