மாருதி ஸ்விப்ட்டுக்கு நீளும் வெயிட்டிங் பீரியட்.. மாற்றாக திகழும் ரிட்ஸ்
ஸ்விப்ட் உற்பத்தி பாதிக்கப்பட்டு வெயிட்டிங் பீரியட் நீண்டு வருவதால் பல வாடிக்கையாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். பிற பிராண்டுகளு்ககு போகவும் பலருக்கு தயக்கம். இந்த நிலையில், ஸ்விப்ட்டுக்கு மாற்றான சிறந்த கார் மாருதியிடமே இருக்கிறது.
ஆம். மாருதி ரிட்ஸ் எஞ்சின், இடவசதி மற்றும் இதர வசதிகளில் ஸ்விப்ட்டுக்கு இணையாகவே இருக்கிறது. ஸ்விப்ட்டை விட விலையும் குறைவு. வடிவமைப்பில் மட்டும்தான் பெரிய வேறுபாட்டை கூறலாம்.

ஸ்விப்ட்டில் பொருத்தப்பட்டிருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின்தான் ரிட்ஸ் காரிலும் பொருத்தப்பட்டிருக்கிறது. மேலும், மைலேஜிலும் இரு கார்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அதேவேளை, ரிட்ஸ் பெர்பார்மென்சில் நன்மதிப்பை பெற்றுள்ளது.
ஸ்விப்ட் பெட்ரோல் மாடல் ரூ.4.44 லட்சத்திலும், டீசல் மாடல் ரூ.5.53 லட்சம் ஆரம்ப விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. ரிட்ஸ் பெட்ரோல் மாடல் ரூ.4.16 லட்சம் ஆரம்ப விலையிலும், டீசல் மாடல் ரூ.5.18 லட்சம் ஆரம்ப விலையிலும் கிடைக்கிறது. (எக்ஸ்ஷோரூம் விலை).
இடவசதியிலும் சிறந்த காராகவே கூறலாம். உயரமானவர்கள் கூட டிரைவர் சீட்டில் சாகவாசமாக அமர்ந்து ஓட்ட முடியும். திரும்ப விற்பனை செய்யும்போதும் சிறந்த விலை கிடைப்பதாக யூஸ்டு கார் மார்க்கெட்டில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, ஸ்விப்ட்டுக்கு மாதக்கணக்கில் காத்துக் கிடப்பதை தவிர்க்க நினைப்பவர்களுக்கு ரிட்ஸ் காரை சிறந்த தேர்வாக கூறலாம்.


Click it and Unblock the Notifications








