சீனாவில் பெரும் வெற்றி.. இந்தியாவிலும் தக்க வைக்குமா செவர்லே செயில்?

Chevy Sail
சீன மார்க்கெட்டில் பெரும் வெற்றியை பெற்றிருக்கும் செவர்லே செயில், இந்தியாவிலும் அந்த வெற்றியை தக்க வைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

உருப்படியான கார் மாடல் இல்லாமல் செவர்லே பிராண்டு குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு விற்பனையில் சாதிக்க முடியவில்லை. இந்த நிலையில், விற்பனையை அதிகரித்து போட்டியாளர்களை சமாளிக்க புதிய கார் மாடல்களை அறிமுகப்படுத்த செவர்லே திட்டமிட்டிருக்கிறது.

இதற்காக, பண்டிகை காலத்தில் செயில் என்ற பெயரில் புத்தம் புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் காரை செவர்லே அறிமுகப்படுத்துகிறது. தமிழகம் உள்பட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இந்த புதிய ஹேட்ச்பேக் காரை செவர்லே சோதனை ஓட்டங்களை நடத்தி வருகிறது.

இந்த சோதனை ஓட்டங்கள் இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், அடுத்த ஓரிரு மாதங்களில் இந்த புதிய ஹேட்ச்பேக் விற்பனைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், சீன மார்க்கெட்டில் செயில் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக திகழ்கிறது.

கடந்த மாதம் 25,000 செயில் கார்கள் சீன மார்க்கெட்டில் விற்பனையாகி உள்ளது. எனவே, இந்திய மார்க்கெட்டிலும் செயில் செவர்லேயின் கேம் சேஞ்சர் காராக மாறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் ஃபியட்டின் 1.3 லிட்டர் டீசல் எஞ்சினுடன் செயில் வருகிறது.

ரூ.5 லட்சத்திற்குள்ளான விலையில் இந்த புத்தம் புதிய ஹேட்ச்பேக் கார் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ஆட்டோமொபைல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 31, 2012, 15:56 [IST]
English summary
General Motors journey in India so far has been a bit wayward. When there was a huge demand of mini B2 segment diesel compact cars, the company did not have any variants on offer. However, this scenario is expected to change soon with the launch of the Chevrolet Sail in India. The company is currently thriving on Chevrolet Beat diesel's sales in the mini B1 segment. In the coming few months, General Motors India would tap into the mini B2 segment with the Chevrolet Sail.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+