குறைந்த விலை எக்ஸ்யூவி 500வை அறிமுகம் செய்யும் மஹிந்திரா!

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திராவின் புதிய எஸ்யூவி மார்க்கெட்டில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மஹிந்திராவின் பிராண்டு மதிப்பையும் வெகுவாக உயர்த்தியுள்ளது.
மஹிந்திரா புதிய எக்ஸ்யூவி 500 புக்கிங்கிலும் அசத்தி வருகிறது. முதல் கட்டமாக 8,000 எஸ்யூவியும், இரண்டாம் கட்டமாக 25,000 எக்ஸ்யூவியும் புக்கிங் செய்யப்பட்டது.
ஆனால், புக்கிங் செய்யப்பட்ட அளவுக்கு மஹிந்திராவிடம் உற்பத்தி திறன் இல்லை. இதனால், இரண்டாம் கட்டமாக நடந்த புக்கிங்கில் குலுக்கல் முறையில் வாடிக்கையாளர்களை தேர்வு செய்தது மஹிந்திரா.
இந்த நிலையில், வடிவமைப்பு பல மாற்றங்கள் மற்றும் கூடுதல் அம்சங்களுடன் புதிய சஃபாரி எஸ்யூவியை டாடா மோட்டார்ஸ் விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது. சஃபாரி ஸ்டார்ம் என்ற பெயரில் வரும் டாடாவின் புதிய எஸ்யூவி மஹிந்திரா எக்ஸ்யூவிக்கு நெருக்கடியை கொடுக்கும் என்று தெரிகிறது.
கடந்த மாதம் நடந்து முடிந்த இரண்டாம் கட்ட புக்கிங்கில் எக்ஸ்யூவியை புக்கிங் செய்து குலுக்கலில் தேர்வு பெறாமல் அதிருப்தியடைந்துள்ள வாடிக்கையாளர்கள் புதிய சஃபாரியை நோக்கி செல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதை தவிர்க்கும் விதத்தில் குறைந்த விலை எக்ஸ்யூவியை விற்பனைக்கு கொண்டு வர மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.
எக்ஸ்யூவியின் என்ட்ரி லெவல் டபிள்யூ6 வேரியண்ட்டில் கூடுதல் அம்சங்களை குறைத்துவிட்டு குறைந்த விலையில் அறிமுகம் செய்ய மஹிந்திரா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், உற்பத்தியையும் கணிசமாக அதிகரிக்கவும் மஹி்ந்திரா திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








