டீசல் எஞ்சினுடன் ஆல்ட்டோ, வேகன்-ஆர்: மாருதி திட்டம்

பெட்ரோல் விலை எகிறியதால் டீசல் கார்களின் விற்பனை அமோகமாக இருக்கிறது. இதனால், புதிய டீசல் எஞ்சின் ஆலைகளை கட்டுவதற்கு பெரும்பாலான நிறுவனங்கள் முடிவு எடுத்துவிட்டன.
இந்த நிலையில், என்ட்ரி லெவல் கார் மார்க்கெட்டில் அதிகம் விற்பனையாகும் மாருதி ஆல்ட்டோ, வேகன்-ஆர், ஹூண்டாய் ஐ20, சான்ட்ரோ, செவர்லே ஸ்பார்க் என பெரும்பாலான கார்கள் பெட்ரோல் மாடலிலேயே விற்பனை செய்யப்படுகின்றன.
செவர்லே பீட் மட்டும் 1.0 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலில் கிடைப்பதால் நல்ல விற்பனை வளர்ச்சியை அந்த கார் பெற்று வருகிறது. இதைவிட்டால், எல்பிஜி, சிஎன்ஜி மாடல்களில் மேற்கண்ட கார்கள் கிடைக்கின்றன.
இதனால், அந்த கார்களின் விற்பனை இந்த ஆண்டு எதிர்பார்த்த வளர்ச்சியை எட்டாது என்று ஆட்டோமொபைல் துறை ஆருடங்கள் கூறுகின்றன. இந்த நிலையில், டீசல் எஞ்சினுடன் ஆல்ட்டோ, வேகன்-ஆர் கார்களை தயாரிப்பது குறித்து மாருதி பரிசீலித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
1.3 லிட்டர் மல்டி எஞ்சினை மாட்டி வேகன்-ஆர் காரை விற்பனைக்கு கொண்டு வர மாருதி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆல்ட்டோவுக்கு குறைந்த சிசி திறன் கொண்ட புதிய எஞ்சினை பொருத்துவது குறித்தும் மாருதி தீவர ஆலோசனைகளை நடத்தி வருகிறது.
டீசல் மாடல்களில் ஆல்ட்டோ, வேகன்-ஆர் கார்கள் விற்பனைக்கு வந்தால் குறைந்த விலையில் கிடைக்கும் டீசல் கார்களாக மாறிவிடும் என்பதால், விற்பனையி்ல் நல்ல வளர்ச்சியை எட்டும் என்று ஆணித்தரமாக கூறலாம்.


Click it and Unblock the Notifications








