இண்டிகா, சுமோ கார்களுக்கு மாற்றாக புதிய மாடல்கள்: டாடா முடிவு

கடந்த 14 ஆண்டுகளாக மார்க்கெட்டில் இருக்கும் டாடா இண்டிகா கார் விற்பனையில் எதிர்பார்த்த அளவு கைகொடுக்கவில்லை. இதனால், இண்டிகாவின் உற்பத்தியை நிறுத்திவிட்டு அதற்கு மாற்றாக புதிய காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்டிகா தவிர என்ட்ரி லெவல் எஸ்யூவியான சுமோவின் விற்பனையும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதேபோன்று, மரீனா, இன்டிகோ ஆகிய கார் மாடல்களும் சோபிக்காததால் அந்த மாடல்களை கைவிட டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இதனால், வரும் காலத்தில் பல புதிய கார் மாடல்களை டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய காலகட்டத்துக்கு ஏற்ப தரம், வசதிகள் மற்றும் தொழில்நுட்பத்துடன் புதிய மாடல்களை வடிவமைத்து களமிறக்க டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








