கார் ஓட்டத் தெரியுமா?- அப்ப ஏ-ஸ்டார் காரை வெல்ல வாய்ப்பு!

முறையாக வாகனம் ஓட்டுவதையும், சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்திலும் மாருதி கார் நிறுவனமும், ஆட்டோகார் இந்தியா ஆட்டோமொபைல் இணையதளமும் இணைந்து ஆண்டுதோறும் சிறந்த ஓட்டுனரை தேர்வு செய்யும் போட்டி ஒன்றை நடத்தி வருகின்றன.
3வது ஆண்டாக நடைபெற உள்ள இந்த போட்டியில் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்கும் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டோர் பங்கேற்கலாம். இந்த போட்டியில் பங்கேற்பவர்கள் சாலை விதிகளை அனுசரித்து சாலையில் பாதுகாப்பாகவும், முறைப்படியும் ஓட்டுவது குறித்து அவர்களது ஓட்டுனர் திறன் சோதிக்கப்படும்.
3 கட்டங்களாக நடைபெற உள்ள இந்த போட்டியில் வெற்றிபெறுபவருக்கு மாருதி ஏ-ஸ்டார் கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. மேலும், ஆட்டோகார் இந்தியா இணையதளத்தின் பாதுகாப்பான கார் ஓட்டும் பிரச்சாரத்திற்கான தூதராகவும் நியமிக்கப்படுவர்.
(மேலும் விபரங்களுக்கும் இந்த போட்டியில் பங்கேற்க விரும்புவர்களும் இங்கே சொடுக்கவும்)


Click it and Unblock the Notifications








