வாழ்த்துங்கள்.. மஹிந்திரா எக்ஸ்யூவிக்கு இன்று முதல் பிறந்தநாள்!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28ந் தேதி எக்ஸ்யூவியை மஹிந்திரா அறிமுகம் செய்தது. ஆனால், 29ந் தேதிதான் விலை உள்ளிட்ட பிற விபரங்களுடன் விற்பனைக்கு முறைப்படி அறிமுகம் செய்யப்பட்டது.
எனவே, எக்ஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டு இன்று ஓர் ஆண்டு ஆகிறது. அறிமுகம் செய்யப்பட்டு ஒரு சில மாதங்கள் புக்கிங் குவியும். ஆனால், ஓர் ஆண்டு ஆகியுள்ள நிலையிலும் மஹிந்திரா எக்ஸ்யூவி 500வுக்கு வாடிக்கையாளர் மத்தியில் தொடர்ந்து பேராதரவு நிலவுகிறது.
இந்த நிலையில், எக்ஸ்யூவியின் முதல் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் சிறப்பு பரிசு திட்டத்தை மஹிந்திரா அறிவித்துள்ளது.
அதாவது, 18002004646 என்ற டோல் ப்ரீ எண்ணுக்கு போன் செய்து எக்ஸ்யூவி 500வை வாழ்த்துபவர்களில் ஒருவரை குலுக்கல் முறையில் தேர்வு செய்து ஆப்ரிக்காவுக்கு சுற்றுலா செல்லும் வாய்ப்பை மஹிந்திரா வழங்குகிறது.


Click it and Unblock the Notifications








