பிரிட்டனில் மீண்டும் அறிமுகமாகும் உல்ட்டா ஆட்டோ

கடந்த 1960ம் ஆண்டில் இந்த கார் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், போதிய வரவேற்பு இல்லாததால் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், பீல்-50 காரை வேறு ஒரு புதிய நிறுவனம் தற்போது மீண்டும் பிரிட்டனில் அறிமுகப்படுத்த இருக்கிறது. முன்புறம் இரண்டு வீல்களும், பின்புறம் ஒரே ஒரு வீலையும்(ஆட்டோவின் உல்ட்டா) கொண்டிருக்கிறது பீல்-50.
இதில், 50 சிசி பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இடதுபுற பக்கவாட்டில் ஒரு கதவு மட்டும் கொண்ட இந்த காரில் ஒரே ஒருவர் பயணம் செய்யலாம். ஷாப்பிங் செல்வதற்கு ஏதுவாக ஒரு பையை காருக்குள் வைத்துக்கொள்ளும் அளவுக்கு மட்டுமே இடம் இருக்கிறது.
இரண்டு வேரியண்ட்களில் பீல்-50 விற்பனைக்கு வர உள்ளது. டிரைடென்ட் என்ட்ரி லெவல் வேரியண்ட்டாகவும், பி-50 டாப் வேரியண்ட்டாகவும் கிடைக்கும். பின்புறம் ஒரே ஒரு வீலை கொண்டுள்ளதால் இதன் டர்னிங் ரேடியஸ் மிக குறைவு என்பதால் சந்து பொந்துகளில் கூட எளிதாக திருப்ப முடியும்.
இதில், பொருத்தப்பட்டிருக்கும் எஞ்சின் 3.5 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். இந்த கார் அதிகபட்சம் 24 கிமீ வேகத்தில் செல்லும். இதன் எலக்ட்ரிக் மாடல் மணிக்கு 45 கிமீ வேகத்தில் செல்லும் என்பதோடு ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 80 கிமீ தூரம் பயணிக்க முடியும். இந்திய மதிப்பில் இந்த கார் ரூ.12 லட்சம் விலையில் விற்பனைக்கு வர இருக்கிறது.


Click it and Unblock the Notifications








