டி செக்மென்ட்டில் யாரும் நெருங்க முடியாத இடத்தில் எக்ஸ்யூவி

கடந்த ஆண்டு மஹிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்த புதிய எஸ்யூவி மார்க்கெட்டில் பெரும் வரவேற்பை பெற்றது அறிந்ததே. டி செக்மென்ட்டில் உள்ள செடான் கார்கள் தற்போது ரூ.12 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
எஸ்யூவி ரகத்தை சேர்ந்ததாக இருந்தாலும் மஹிந்திரா எக்ஸ்யூவி விலை அடிப்படையில் டி செக்மென்ட் கார்களுக்கு நேரடியாக போட்டியை கொடுத்து வருகிறது. கடந்த சில மாதங்களாக டி செக்மென்ட் விற்பனையில் எக்ஸ்யூவி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
கடந்த மாதம் டி செக்மென்ட்டில் ஒட்டுமொத்தமாக 1,059 செடான் கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ள நிலையில், மஹிந்திரா நிறுவனம் 4,603 எக்ஸ்யூவி கார்களை விற்பனை செய்துள்ளது. டி செக்மென்ட்டின் மொத்த கார் விற்பனையில் இது 77 சதவீத பங்களிப்பாக இருக்கிறது.
குறிப்பாக, செடான் கார்களை எடுத்துக்கொண்டால் கடந்த மாதம் 424 டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் கார்கள் விற்பனையானதே டி செக்மென்ட்டில் அதிகபட்ச விற்பனை அளவாக இருக்கிறது.
மேலும், கடந்த சில மாதங்களாக எக்ஸ்யூவியின் விற்பனையையும், டி செக்மென்ட் செடான் கார்களையும் ஒப்பிட்டு பார்க்கும்போது, இரண்டிற்கும் விற்பனையில் இருக்கும் இடைவெளி அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால், டி செக்மென்ட்டில் செடான் கார்களை விற்பனை செய்து வரும் கார் நிறுவனங்கள் செய்வதறியாது திகைத்து போயுள்ளன.
அதிக இடவசதி, , நவீன தொழில்நுட்பங்கள், சரியான விலை என எக்ஸ்யூவி வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து வருவதே இதற்கு காரணமாக உள்ளது.


Click it and Unblock the Notifications








