ஆண்டுக்கு 10 லட்சம் பைக்குகள்: யமஹா புதிய இலக்கு

ஐப்பானிய நிறுவனமான யமஹா தனது முதல் ரே ஸ்கூட்டரை ஐதராபாத்தில் நடந்த விழாவில் நேற்று அறிமுகம் செய்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய யமஹா இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஹிரோயுகி சுஸுகி யமஹாவின் எதிர்கால திட்டங்கள் பற்றி கூறினார்.
அப்போது, சென்னையில் அமைக்கப்படும் ஆலையின் விபரங்கள் மற்றும் எதிர்கால இலக்குகள் பற்றிய தகவல்களை வெளியிட்டார். அவர் கூறியதாவது:
2014ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 10 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்ய இலக்கு வைத்துள்ளோம். விற்பனை உயர்வுக்கு தக்கவாறு உற்பத்தி திறனையும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.
இதற்காக, ரூ.1500 கோடி முதலீட்டில் சென்னையில் புதிய தொழிற்சாலையை நிறுவ இருக்கிறோம். 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த புதிய ஆலையில் உற்பத்தி துவங்கப்படும்.
இந்த புதிய ஆலையில் முதல்கட்டமாக ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும். பின்னர் ஆண்டுக்கு 28 லட்சம் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் அளவுக்கு மேம்படுத்தப்படும்," என்றார்.
தமிழகத்தில் ஆலை அமைப்பதற்காக தமிழக அரசுடன் யமஹா நிறுவனம் கடந்த மேமாதம் ஒப்பந்தம் செய்து கொண்டது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications








