புதுப்பொலிவுடன் எட்டியோஸ், லிவா கார்கள் அறிமுகம்- விபரங்கள்
புதுப்பொலிவுடன் எட்டியோஸ் மற்றும் லிவா கார்களை டொயோட்டா விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் பல மாற்றங்களுடன் வந்திருக்கும் இந்த கார்களில் சில ஆக்சஸெரீஸ்களை ஸ்டான்டர்டாக கொடுத்துள்ளது டொயோட்டா.
மேலும், லிமிடேட் எடிசன் காராக விற்பனை செய்யப்பட்டு வந்த லிவா டிஆர்டி ஸ்போர்டிவோ வேரியண்ட்டை தற்போது புதிய வேரியண்ட்டாக சேர்த்துள்ளது டொயோட்டா. இந்த காரில் எட்டியோஸில் பணிபுரிந்து வரும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதுதவிர, டீசல் மாடலில் புதிய ஜே என்ற பேஸ் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இரண்டு கார்களின் முகப்பு கிரில் வடிவமைப்பு மாற்றம் கண்டுள்ளது. புதிய டெயில் லேம்ப் பொருத்தப்பட்டுள்ளது. விங் மிரரில் இண்டிகேட்டர் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. 12 ஸ்போக்குகள் கொண்ட 15 இஞ்ச் அலாய் வீல்கள் டாப் வேரியண்ட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய கிளாஸிக் கிரே கலரிலும் கிடைக்கும்.
இரட்டை வண்ண இன்டிரியர், அட்ஜெஸ்ட் வசதி கொண்ட ஹெட்ரெஸ்ட்டுகள் மற்றும் டிரைவர் இருக்கை, ஃபாக்ஸ் வுட் பினிஷிங், புளூடூத், யுஎஸ்பி, ஆக்ஸ் இன், ரிமோட் வசதிகள் கொண்ட 2டின் மியூசிக் சிஸ்டம், புதிய ஏசி பேனல் ஆகியவை உட்புறத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள். எட்டியோஸ் ரூ.5.45 லட்சத்திலும், லிவா ரூ.4.46 லட்சத்திலும் விற்பனைக்கு வந்துள்ளன. ஸ்லைடரில் புதிய எட்டியோஸ் மற்றும் லிவா கார்களின் படங்களை காணலாம்.

புதிய எட்டியோஸ், லிவா


புதிய எட்டியோஸ்

புதிய எட்டியோஸ்

புதிய எட்டியோஸ்

புதிய எட்டியோஸ்

புதிய எட்டியோஸ்

புதிய எட்டியோஸ்

புதிய எட்டியோஸ்

புதிய எட்டியோஸ்

புதிய எட்டியோஸ்

புதிய எட்டியோஸ்

புதிய எட்டியோஸ்

புதிய எட்டியோஸ்

புதிய எட்டியோஸ்

புதிய எட்டியோஸ்

புதிய எட்டியோஸ்

புதிய லிவா

புதிய லிவா

புதிய லிவா

புதிய லிவா

புதிய லிவா

புதிய லிவா



Click it and Unblock the Notifications








