ரோல்ஸ்ராய்ஸ் பிரியர்களை தன்வசம் இழுக்கும் பென்ட்லீயின் புதிய ஆடம்பர கார்!

ரோல்ஸ்ராய்ஸ் பிரியர்களை திரும்பி பார்க்க வைக்கும் அசத்தலான அம்சங்களுடன் புதிய ஃப்ளையிங் ஸ்பர் ஆடம்பர காரின் புகைப்படங்களை பென்ட்லீ வெளியிட்டிருக்கிறது. அடுத்த மாதம் நடைபெறும் ஜெனீவா மோட்டார் ஷோவீல் இந்த புதிய ஆடம்பர காரை பென்ட்லீ அறிமுகம் செய்ய இருக்கிறது.

இந்த காரின் பெயரில் இருந்த கான்டினென்டல் என்ற வார்த்தைக்கு பதிலாக ப்ளையிங் ஸ்பர் என்ற பிராண்டு பெயரிலேயே விற்பனைக்கு வர இருக்கிறது. முந்தைய மாடலைவிட சற்று நீளத்திலும், உயரத்திலும் கூடுதலாகி இருக்கிறது புதிய ஃப்ளையிங் ஸ்பர். இந்த கார் பற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

சிறு அறிமுகம்

சிறு அறிமுகம்

கடந்த 2005ம் ஆண்டு கான்டினென்டல் ஃப்ளையிங் ஸ்பர் ஆடம்பர காரை பென்ட்லீ அறிமுகப்படுத்தியது. ஏழே ஆண்டுகளில் உலக அளவில் 22,000 கார்கள் விற்பனையாகியிருக்கின்றன.

சீனர்களுக்கு பிடித்த கார்

சீனர்களுக்கு பிடித்த கார்

இதுவரையிலான மொத்த விற்பனையில் 50 சதவீத கார்கள் அமெரிக்கா மற்றும் சீனாவில்தான் விற்பனையாகி உள்ளன.

 புரொஜெக்ட் லீடரின் கூற்று

புரொஜெக்ட் லீடரின் கூற்று

முந்தைய கான்டினென்டல் ஃப்ளையிங் ஸ்பர் அதிக விபத்துக்களை சந்தித்தது. அதிலிருந்து அனைத்து குறைகளையும் போக்கி புதிய காரை வடிவமைத்துள்ளதாக புதிய கார் திட்டத்துக்கான தலைவர் கேமரூன் பீட்டர்சன் கூறுகிறார்.

தோற்றம்

தோற்றம்

ரோல்ஸ்ராய்ஸ் கார்களுக்கு கடும் நெருக்கடியை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த காரை மிக நேர்த்தியாக உருவாக்கி அசத்தியிருக்கின்றனர் பென்ட்லீ டிசைனர்கள்.

எஞ்சின்

எஞ்சின்

இந்த காரில் 6.0 லிட்டர் டபிள்யூ12 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 616 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.

டிரான்ஸ்மிஷன்

டிரான்ஸ்மிஷன்

முந்தைய 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனுக்கு பதிலாக புதிய காரில் 8 ஸ்பீடு இசட்எஃப் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கிறது.

 உந்துசக்தி

உந்துசக்தி

இந்த கார் 0-97 கிமீ வேகத்தை 4.3 வினாடிகளில் தொட்டுவிடும்.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

அதிகபட்சமாக மணிக்கு 325 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.

 விற்பனை எப்போது?

விற்பனை எப்போது?

இந்த ஆண்டு இறுதியில் இந்த புதிய கார் விற்பனைக்கு வர இருக்கிறது.

இன்டிரியர்

இன்டிரியர்

இந்த காரின் இன்டிரியர் முழுவதுமாக மாற்றப்பட்டுள்ளது. டேஷ்போர்டு, இருக்கைகள், மரவேலைப்பாடுகள் என அனைத்தும் புதியது. அதாவது, 600 புதிய பாகங்களை கொண்டு இன்டிரியரை அசத்தியிருக்கின்றனர்.

இன்டிரியர்

இன்டிரியர்

More from DriveSpark

Article Published On: Saturday, February 23, 2013, 14:37 [IST]
English summary
Bentley to unveil the new Continental Flying Spur. The top speed for the new Bentley Flying Spur is pegged at 332kmph.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+