புதிய பிஎம்டபிள்யூ 4 சீரிஸ் கூபே அறிமுகம்: படங்கள், தகவல்கள்

அட்டகாசமான டிசைன் கொண்ட புதிய பிஎம்டபிள்யூ 4 சீரிஸ் கூபே கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 3 சீரிஸ் காரின் கூபே மாடலாக வந்திருக்கும் இந்த 4 சீரிஸ் கூபே விரைவில் அமெரிக்காவில் விற்பனைக்கு வர இருக்கும் மாடலின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 428ஐ என்ற வேரியண்ட் 4 சிலிண்டர் கொண்ட 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடனும், 435ஐ என்ற வேரியண்ட் 6 சிலிண்டர் கொண்ட 3.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடனும் வருகிறது.

428ஐ மாடலில் பொருத்தப்பட்டிருக்கும் 2.0 லிட்டர் எஞ்சின் 240 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். 0-96 கிமீ வேகத்தை 6 வினாடிகளில் தொட்டுவிடும். 435ஐ 3.0 லிட்டர் எஞ்சின் மாடலில் பொருத்தப்பட்டிருக்கும் எஞ்சின் 300 எச்பி ஆற்றலை வெளிப்படுத்துவதாக இருக்கும். இரண்டு மாடல்களும் மணிக்கு 250 கிமீ வேகம் செல்லும் திறன் கொண்டதாக இருக்கும். இந்த கார் ஆல்வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது.

428ஐ மாடலில் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. 435ஐ மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்டதாக கிடைக்கும். இதனிடையே, பிஎம்டபிள்யூவின் இரண்டு கதவுகள் கொண்ட கூபே மற்றும் கன்வெர்ட்டிபிள் மாடல்கள் இனி இரட்டைப்படை வரிசை எண்களில் மட்டுமே பெயர் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை விபரம்

விலை விபரம்

அமெரிக்க விலை விபரம்

428i Coupe: $41,425

428i xDrive: $46,925

435i: $43,425

435i xDrive: $48,925

2014 பிஎம்டபிள்யூ 4 சீரிஸ் கூபே
2014 பிஎம்டபிள்யூ 4 சீரிஸ் கூபே
2014 பிஎம்டபிள்யூ 4 சீரிஸ் கூபே
2014 பிஎம்டபிள்யூ 4 சீரிஸ் கூபே
2014 பிஎம்டபிள்யூ 4 சீரிஸ் கூபே
2014 பிஎம்டபிள்யூ 4 சீரிஸ் கூபே
2014 பிஎம்டபிள்யூ 4 சீரிஸ் கூபே
2014 பிஎம்டபிள்யூ 4 சீரிஸ் கூபே
2014 பிஎம்டபிள்யூ 4 சீரிஸ் கூபே
2014 பிஎம்டபிள்யூ 4 சீரிஸ் கூபே
2014 பிஎம்டபிள்யூ 4 சீரிஸ் கூபே
2014 பிஎம்டபிள்யூ 4 சீரிஸ் கூபே
2014 பிஎம்டபிள்யூ 4 சீரிஸ் கூபே
2014 பிஎம்டபிள்யூ 4 சீரிஸ் கூபே
2014 பிஎம்டபிள்யூ 4 சீரிஸ் கூபே
2014 பிஎம்டபிள்யூ 4 சீரிஸ் கூபே
2014 பிஎம்டபிள்யூ 4 சீரிஸ் கூபே
2014 பிஎம்டபிள்யூ 4 சீரிஸ் கூபே
Most Read Articles
English summary
The all new 2014 BMW 4-Series Coupe, set to replace the 3-Series, has been revealed, along with U.S spec details. The new 4-Series Coupe is sleeker than the outgoing 3-Series since it wears the new gen BMW design theme. All variant specific packages have been carried over from the 3-Series Coupe though.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X