செவர்லே க்ரூஸ் செடான் கார் விற்பனைக்கு வந்தது: முழு விபரம்!

By Saravana

கூடுதல் அம்சங்கள் கொண்ட செவர்லே க்ரூஸ் செடான் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இன்று முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மார்க்கெட்டில் பிரத்யேக வாடிக்கையாளர் வளையத்தை கொண்ட மாடல் இது.

இதன் ஸ்டைல், பெர்ஃபார்மென்ஸ் அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில், போட்டியாளர்களை சமாளிக்கும் விதத்தில் சில கூடுதல் அம்சங்களை புகுத்தி புதிய மாடலாக வெளியிடப்பட்டுள்ளது. அதுபற்றிய கூடுதல் விபரங்கள், படங்களை ஸ்லைடரில் காணலாம்.

டிசைன் மாற்றங்கள்

டிசைன் மாற்றங்கள்

முகப்பு ஹெட்லைட், பனி விளக்குகள் அறை போன்றவற்றின் டிசைன் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. டியூவல் கிரில், அதில் மையத்தில் செவர்லே சின்னம் போன்றவை வசீகரமாக இருக்கின்றன.

அலாய் வீல்கள்

அலாய் வீல்கள்

புதிய டிசைன் கொண்ட அலாய் வீல்களும் காரின் தோற்றத்துக்கு கூடுதல் பொலிவை தருகிறது.

கூடுதல் பாதுகாப்பு

கூடுதல் பாதுகாப்பு

செவர்லே க்ரூஸ் காரில் கூடுதலாக 2 ஏர்பேக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன. டாப் வேரியண்ட்டில் 4 ஏர்பேக்குகள் இருக்கின்றன. இரண்டு முன்புற ஏர்பேக்குகளும், இரண்டு பக்கவாட்டு ஏர்பேக்குகளாக பொருத்தப்பட்டிருக்கின்றன.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

ஆடியோ சிஸ்டம், எலக்ட்ரிக்கல் முறையில் இயங்கும் ரியர் வியூ கண்ணாடிகள் போன்ற வசதிகளை க்ரூஸ் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

முந்தைய மாடலில் இருக்கும் அதே 2.0 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின்தான் இந்த மாடலிலும் செயலாற்றுகிறது. இந்த எஞ்சின் 166 பிஎஸ் பவரையும், 380 என்எம் டார்க்கையும் அளிக்கும். 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்ட மாடல்களில் கிடைக்கும்.

மைலேஜ்

மைலேஜ்

ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 14.81 கிமீ மைலேஜையும், மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடல் லிட்டருக்கு 17.3 கிமீ மைலேஜையும் தரும்.

விலை விபரம்

விலை விபரம்

க்ரூஸ் எல்டி(எம்டி): ரூ.14,37,220

க்ரூஸ் எல்டிஇசட்(எம்டி): ரூ.15,93,184

க்ரூஸ் எல்டிஇசட்(ஏடி): ரூ.16,99,053

More from DriveSpark

Article Published On: Wednesday, March 26, 2014, 15:05 [IST]
English summary
Chevrolet has officially confirmed the launch of the facelifted version of the Cruze sedan. The 2014 Chevrolet Cruze has not dramatically changed in how it looks, but the few improvements that it has received are worthy of mention.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+