ஃபியட் லீனியா காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு வந்தது! - முழு விபரம்
கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதுப்பொலிவுடன் கூடிய ஃபியட் லீனியா கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இந்த கார் மிட்சைஸ் செக்மென்ட்டில் சவால் தரும் விலையில் வந்திருக்கிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் 7 வேரியண்ட்டுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வெளித்தோற்றத்தில் மாறுதல்கள், புதிய டேஷ்போர்டு மற்றும் வசதிகளுடன் வந்துள்ளது. . ஃபியட் லீனியா ஃபேஸ்லிஃப்ட் மாடல் நாடுமுழுவதும் உள்ள 108 ஃபியட் டீலர்ஷிப்புகள் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.

பெரிய கார்
இதன் செக்மென்ட்டில் இதுதான் நீளமான கார். ஃபியட் லீனியா ஃபேஸ்லிஃப்ட் மாடல் 4,596 மிமீ நீளம், 1,730 மிமீ அகலம், 2,603 மிமீ வீல் பேஸ் கொண்டது. பெட்ரோல் மாடல் 1,487 மிமீ உயரமும், டீசல் மாடல் 1,494 மிமீ உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

எஞ்சின்
114 பிஎஸ் பவரை அளிக்கும் 1.4 லிட்டர் டி- ஜெட் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 93 பிஎஸ் பவரை அளிக்கும் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சினுடன் வந்துள்ளது. இரண்டிலும் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கிறது.

சிறப்பம்சங்கள்
ரெயின் சென்சிங் வைப்பர்கள், ஃபாலோ மீ ஹெட்லைட்டுகள், டிஸ்க் பிரேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவற்றுடன் வந்துள்ளது. ரியர் ஆர்ம்ரெஸ்ட், கிளவ் பாக்ஸ், கப் ஹோல்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மிட்சைஸ் கார் செக்மென்ட்டில் மிக நீளமான கார் என்பதால், போதுமான லெக்ரூம் வசதியை கொண்டுள்ளது.

வண்ணங்கள்
டஸ்கன் ஒயிட், நியூ பியர்ல் ஒயிட், சன்பீம் கோல்டு, மினிமல் கிரே, ஹிப் ஹாப் பிளாக் மற்றும் மக்னிசியோ கிரே ஆகிய 6 வண்ணங்களில் கிடைக்கும்.

விலை
பெட்ரோல் மாடல்
லீனியா ஆக்டிவ்: ரூ.6.99 லட்சம்
லீனியா டி ஜெட் ஆக்டிவ்: 7.44 லட்சம்
லீனியா டி ஜெட் டைனமிக்: ரூ.8.53 லட்சம்
லீனியா டி ஜெட் எமோஷன்: ரூ.9.01 லட்சம்
டீசல் மாடல்
லீனியா மல்டிஜெட் ஆக்டிவ்: ரூ.8.15 லட்சம்
லீனியா மல்டிஜெட் டைனமிக்: ரூ.9.27 லட்சம்
லீனியா மல்டிஜெட் எமோஷன்: ரூ.9.72 லட்சம்
(அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலைகள்)


Click it and Unblock the Notifications








