ஃபியட் புன்ட்டோ ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு வந்தது- விபரம்
சவால் தரும் விலையில் ஃபியட் புன்ட்டோ எவோ ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் ஃபியட் இந்தியா நிறுவனத்தின் தலைவர் நாகேஷ் பசவனஹள்ளி மற்றும் நடிகை எவ்லின் ஷர்மா ஆகியோர் முன்னிலையில் இந்த புதிய கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
கார் பிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த மாடலில் பல்வேறு சிறப்பம்சங்கள், டிசைனில் மாற்றங்களுடன் கொண்டு வந்திருக்கிறது. இந்த புதிய மாடல் இந்தியாவுக்கு ஏற்ற அம்சங்களுடன் இத்தாலியில் டிசைன் செய்யப்பட்டு வந்துள்ளது. பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்கள் மட்டுமின்றி, பழைய மாடலைவிட சற்று குறைவான விலையில் விற்பனைக்கு கொண்டு வந்து வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது ஃபியட்.

முன்பதிவு
இந்த புதிய மாடலுக்கு டீலர்ஷிப்புகளில் முன்பதிவு நடந்து வருகிறது. வசதிகளை பொறுத்து மொத்தம் 7 வேரியண்ட்டுகளில் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு தகுந்தவாறு தேர்வு செய்துகொள்ளும் வகையில் வெவ்வேறு பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களிலும் வந்துள்ளது.

எஞ்சின் ஆப்ஷன்கள்
பெட்ரோல் மாடலில் 67 பிஎச்பி பவரையும் அளிக்கும் 1.2 லிட்டர் எஞ்சின் மற்றும் 90 பிஎச்பி பவரை அளிக்கும் 1.4 லிட்டர் எஞ்சின் மாடல்களில் கிடைக்கும். டீசல் மாடலில் 1.3 லிட்டர் எஞ்சின் 75 பிஎச்பி மற்றும் 90 பிஎச்பி ஆகிய இருவிதமான பவரை வெளிப்படுத்தும் மாடல்களில் வந்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

வண்ணங்கள்
7 விதமான வெளிப்புற வண்ணங்களில் கிடைக்கும். மினிமல் கிரே, ஹிப் ஹாப் பிளாக், வோக்கல் ஒயிட், கிலிட்டர்ன்டி கோல்டு, மேக்னெசியோ கிரே, எக்ஸோடிகா ரெட் மற்றும் டஸ்கன் ஒயின் ஆகிய வெளிப்புற வண்ணங்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

இன்டிரியர்
புதிய டியூவல் டோன் டேஷ்போர்டு, ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், புளூடூத், யுஎஸ்பி, ஆக்ஸ், வாய்மொழி தகவல் தரும் வசதிகள் கொண்ட மியூசிக் சிஸ்டம் ஆகியவை முக்கிய இம்சங்களாக கூறலாம்.

விலை விபரம்
பெட்ரோல்
ஆக்டிவ்(1.2லி): ரூ.4.55 லட்சம்
டைனமிக்(1.2லி): ரூ.5.12 லட்சம்
எமோஷன்(1.4லி): ரூ.6.65 லட்சம்
டீசல்
ஆக்டிவ்(75பிஎச்பி): ரூ.5.27 லட்சம்
டைனமிக்(75பிஎச்பி): ரூ.6.21 லட்சம்
எமோஷன்(75பிஎச்பி): ரூ.6.83 லட்சம்
ஸ்போர்ட்ஸ்(90பிஎச்பி): ரூ.7.20 லட்சம்
அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை


Click it and Unblock the Notifications








