ரூ.7.42 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்த புதிய ஹோண்டா சிட்டி!
ரூ.7.42 லட்சம் ஆரம்ப விலையில் புதிய ஹோண்டா சிட்டி கார் விற்பனைக்கு வந்துள்ளது. டெல்லியில், நடந்த நிகழ்ச்சியில் புதிய ஹோண்டா சிட்டி காரின் விலை விபரங்கள் சற்றுமுன் அறிவிக்கப்பட்டன.
பெரிதும் எதிர்பார்ப்பில் ஆழ்த்திய டீசல் மாடல் ரூ.8.62 லட்சம் ஆரம்ப விலையில் வந்துள்ளது. பெட்ரோல் மாடலைவிட ரூ.1.20 லட்சம் கூடுதல் விலையில் டீசல் மாடல் வந்துள்ளது. மொத்தம் 12 வேரியண்ட்டுகளில் விற்பனை செய்யப்பட உள்ளது. கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

வேரியண்ட்டுகள்
பெட்ரோல் மாடலில் 5 வேரியண்ட்டுகளிலும், டீசல் மாடலில் 5 வேரியண்ட்டுகளிலும் கிடைக்கும். இதுதவிர, 2 ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டுகளிலும் விற்பனைக்கு வந்துள்ளது.

கூடுதல் அம்சங்கள்
விஎக்ஸ் வேரியண்ட்டில் பல புதிய வசதிகளை புதிய சிட்டி கார் பெற்றுள்ளது. சன் ரூஃப், புஷ் பட்டன் ஸ்டார்ட், க்ரூஸ் கன்ட்ரோல், லெதர் அப்ஹோல்ஸ்டரி, சிடி பிளேயர் உள்ளிட்ட வசதிகளை பெற்றுள்ளது.

எஞ்சின் ஆப்ஷன்
119பிஎஸ் பவரை அளிக்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 100 பிஎஸ் பவர் கொண்ட 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் புதிய ஹோண்டா சிட்டி கார் வந்துள்ளது.

மைலேஜ்
மேனுவல் டிரான்மிஷன் கொண்ட பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 17.8 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 18 கிமீ மைலேஜையும் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், மேனுவலை விட ஆட்டோமேட்டிக் மாடல் அதிக மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. டீசல் ஹோண்டா சிட்டி கார் லிட்டருக்கு 26 கிமீ மைலேஜ் தரும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் டீசல் கார் என்ற பெருமையையும் புதிய ஹோண்டா சிட்டி பெற்றுள்ளது.

டிரான்ஸ்மிஷன்
பெட்ரோல் மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் இருக்கும் நிலையில், டீசல் சிட்டி காரில் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டு வந்துள்ளது. மேலும், பெட்ரோல் மாடலில் சிவிடி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டதாகவும் கிடைக்கும்.

பெட்ரோல் விலை
மேனுவல் கியர் பாக்ஸ்
E MT: ரூ.7.42 லட்சம்
S MT: ரூ.8.04 லட்சம்
SV MT: ரூ.8.49 லட்சம்
V MT: ரூ.8.99 லட்சம்
VX MT: ரூ.9.93 லட்சம்

ஆட்டோமேட்டிக் விலை விபரம்
SV CVT: ரூ.9.49 லட்சம்
VX CVT: ரூ.10.98 லட்சம்

டீசல் விலை விபரம்
E MT: ரூ.8.62 லட்சம்
S MT: ரூ.9.24 லட்சம்
SV MT: ரூ.9.66 லட்சம்
V MT: ரூ.10.16 லட்சம்
VX MT: ரூ.11.10 லட்சம்

முன்பதிவு
இதுவரை 9,000 பேர் புதிய ஹோண்டா சிட்டி காருக்கு முன்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெலிவிரி
டீசல் மாடல் உடனடியாக டெலிவிரி கொடுக்கப்படும் என்றும், பெட்ரோல் மாடலின் டெலிவிரி அடுத்த மாத மத்தியிலிருந்து துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








