புதுப்பொலிவுடன் விற்பனைக்கு வந்தது மஹிந்திரா ஸைலோ ஃபேஸ்லிஃப்ட் மாடல்: விபரம்!
வாடிக்கையாளர்களை கவரும் விதமாக புதுப்பொலிவுடன் மஹிந்திரா ஸ்லோ எம்பிவி காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
தோற்றத்திலும், சஸ்பென்ஷன் அமைப்பிலும் மாற்றங்களுடன் வந்திருக்கும் புதிய ஸைலோ ரூ.7.52 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. படங்கள் மற்றும் விலை உள்ளிட்ட கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

கூடுதல் விபரங்கள்
அடுத்தடுத்த ஸ்லைடுகளில் கூடுதல் விபரங்களை காணலாம்.

வெளிப்புற மாற்றங்கள்
முன்புறத்திலும், பின்புறத்திலும் சில குரோம் பூச்சுடன் கூடிய ஆக்சஸெரீஸ்களுடன் அழகூட்டப்பட்டிருக்கிறது. புதிய ரூஃப் ரெயில்கள் மற்றும் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஸைலோவின் பக்கவாட்டில் டீகெல்கள் கொடுக்கப்பட்டிருப்பதுடன் கூடுதல் கவர்ச்சியை தருகிறது.

இன்டிரியர்
கருப்பு- பீஜ் வண்ண இன்டிரியர் மூலம் கவர்ச்சியாக்கப்பட்டிருக்கிறது இன்டிரியர். புதிய அப்ஹோல்ஸ்டரியும் ரம்மியமாக இருக்கிறது.

ஆடியோ சிஸ்டம்
புளூடூத் மற்றும் வாய்ஸ் கமான்ட் வசதியுடன் கூடிய 2 டின் ஆடியோ சிஸ்டம் பொருத்தப்பட்டிருக்கிறது.

சிறப்பம்சங்கள்
புதிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் கொடுக்கப்பட்டுள்ளன. க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டமும் கூடுதலாக சேர்க்கப்பட்டிருக்கிறது.

பாதுகாப்பு வசதிகள்
ரிவர்ஸ் அசிஸ்ட், இபிடி.,யுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம், டியூவல் ஏர்பேக்ஸ், எலக்ட்ரிக் ரியர் வியூ கண்ணாடிகள் போன்ற வசதிகள் உள்ளன.

இருக்கை வசதி
மூன்றாவது வரிசை இருக்கைகளை 60:40 என்ற விகிதத்தில் மடக்கி விரித்துக் கொள்ளலாம். இதன்மூலம், பொருட்கள் வைப்பதற்கான இடவசதியை அதிகரித்துக் கொள்ள முடியும்.

எஞ்சின் ஆப்ஷன்
93.7 பிஎச்பி பவரை அளிக்கும் 2.5 லிட்டர் சிஆர்டிஇ டீசல் எஞ்சின் டி2 மற்றும் டி4 வேரியண்ட்டுகளில் கிடைக்கும். தவிர, இவை பிஎஸ்-3 மற்றும் பிஎஸ்-4 மாசுக்கட்டுப்பாட்டு அம்சங்கள் கொண்ட மாடல்களில் கிடைக்கும். எச்-4, எச்-8 மற்றும் எச்-9 வேரியண்ட்டுகளில் 118 பிஎச்பி பவரை அளிக்கும் எம்ஹாக் பிஎஸ்-4 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த மாடலில் 5எம்டி320 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன்
சஸ்பென்ஷனிலும் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. இதனால், மிக மென்மையான, சொகுசான பயண அனுபவத்தையும், சிறப்பான நிலைத்தன்மை மற்றும் ஓட்டுதல் தரத்தை வழங்குவதோடு, பாடி ரோல் குறைவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை விபரம்- பிஎஸ்-3
வேரியண்ட் வாரியாக பிஎஸ்-3 மாடலின் விலை விபரம்
டி2 மேக்ஸ் பிஎஸ்-3: ரூ.7.52 லட்சம்
டி2 பிஎஸ்-3: ரூ.7.72 லட்சம்
டி4 பிஎஸ்-3: ரூ.8.13 லட்சம்

விலை விபரம்- பிஎஸ்- 4
வேரியண்ட் வாரியாக பிஎஸ்-4 மாடலின் விலை விபரம்
டி2 மேக்ஸ் பிஎஸ்-4: ரூ.7.66 லட்சம்
டி2 பிஎஸ்-4: ரூ.7.86 லட்சம்
டி4 பிஎஸ்-4: ரூ.8.27 லட்சம்
எச்-4 பிஎஸ்-4: ரூ.8.53 லட்சம்
எச்-4 ஏபிஎஸ் பிஎஸ்-4: ரூ.8.76 லட்சம்
எச்-8 ஏபிஎஸ் பிஎஸ்-4: ரூ.9.75 லட்சம்
எச்-8 ஏபிஎஸ் ஏர்பேக் பிஎஸ்-4: ரூ.10.12 லட்சம்
எச்-9 பிஎஸ்-4: ரூ.10.93 லட்சம்


Click it and Unblock the Notifications








