2014 மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்எஸ் 350 சொகுசு கார் விற்பனைக்கு வந்தது!

By Saravana

சிறிய மாற்றங்களுடன் கூடிய மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்எஸ் 350 சொகுசு காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த வாரம் சர்வதேச மார்க்கெட்டுகளில் அறிமுகம் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடலை அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர மெர்சிடிஸ் பென்ஸ் திட்டமிட்டுள்ளது.

ஆனால், அதற்கு முன்பாக இந்த ஆண்டுக்கான புதிய மாடலாக இந்த காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சில காஸ்மெட்டிக் மாற்றங்களுடன் வந்திருக்கும் இந்த புதிய கார் பற்றிய கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.


புதிய வண்ணம்

புதிய வண்ணம்

இந்த புதிய காரில் 15 ஸ்போக்குகள் கொண்ட 18 இஞ்ச் அலாய் வீல்களுடன் டைமண்ட் சில்வர் என்ற புதிய சாம்பல் நிற வண்ணத்திலும் கிடைக்கும். இது வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும்.

 எஞ்சின்

எஞ்சின்

2014 மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்எஸ் 350 காரில் சக்திவாய்ந்த 3498சிசி வி6 பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக 310 பிஎஸ் பவரையும், 370 என்எம் டார்க்கையும் இந்த எஞ்சின் வழங்கும்.

செயல்திறன்

செயல்திறன்

இந்த புதிய சொகுசு கார் 0- 100 கிமீ வேகத்தை 6.1 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

 சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

பார்க்கிங் இருக்கும் இடத்தை கண்டறிந்து, தானாகவே பார்க்கிங் செய்யும் வசதி கொண்ட ஆக்டிவ் பார்க் அசிஸ்ட், ரிவர்ஸ் கேமரா, முப்பரிமாண திரை, சப் ஊஃபர் மற்றும் 14 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹார்மன் கார்டன் லாஜிக் 7 சர்ரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் போன்றவை சிறப்பு வசதிகளாக இருக்கின்றன.

ஏர்மாட்டிக் சஸ்பென்ஷன்

ஏர்மாட்டிக் சஸ்பென்ஷன்

சாலைநிலைக்கு தக்கவாறு ஓட்டுதல் நிலையை மாற்றினால், இதன் சஸ்பென்ஷனும் அதற்கு தகுந்தாற்போல் மாறும் ஏர்மாட்டிக் சஸ்பென்ஷன் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கிரவுண்ட் கிளியரன்ஸை கூட்டிக் குறைக்கும் வசதியும் உண்டு.

ஆம்பியன்ட் லைட் சிஸ்டம்

ஆம்பியன்ட் லைட் சிஸ்டம்

இந்த காரின் கேபினில் ரம்மியமான ஒளியை வழங்கும் மூன்றுவித வண்ணங்களிலான ஆம்பியன்ட் லைட்டிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. கண்ணாடி கூரையும் இந்த காரின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று. கியர்களை எளிதாக கூட்டி, குறைப்பதற்கு வசதியாக ஸ்டீயரிங் வீலில் பேடில் ஷிப்ட் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

விலை

விலை

முந்தைய மாடல் ரூ.1.03 கோடி விலையில் விற்கப்பட்ட நிலையில், புதிய மாடல் ரூ.14 லட்சம் வரை குறைவான விலையில் வந்துள்ளது. ஆம், புதிய மாடல் ரூ.89,90 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும். இருப்பினும், இது அறிமுகச் சலுகை விலை என்பதால் பின்னர் அதிகரிக்கப்படும் வாய்ப்புள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 2, 2014, 10:42 [IST]
English summary
German luxury car maker Mercedes-Benz recently launched its Edition1 A-Class and B-Class. They have promised to launch ten products in 2014 and have now launched its stylish and powerful CLS 350. The 2014 version of CLS 350 has been launched at a price of INR 89,90,000 ex-showroom Delhi.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+