டாடா ஆரியா ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு வந்தது- முழு விபரம்

By Saravana

எந்தவொரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல், மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் கொண்ட டாடா ஆரியா எம்பிவி கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

சில கூடுதல் ஆக்சஸெரீஸ்கள் மற்றும் சற்று கூடுதல் பவரை அளிக்கும் எஞ்சனுடன் வந்திருக்கிறது மேம்படுத்தப்பட்ட டாடா ஆரியா. வசதிகள், தொழில்நுட்ப அம்சங்களை பொறுத்து ப்யூர், ப்ளெஷர் மற்றும் ப்ரைடு என்ற மூன்று விதமான வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

ஆரியா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 2.2 லிட்டர் வேரிகோர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இது முன்பைவிட சற்று கூடுதல் பவரை அளிக்கும் விதத்தில் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கிறது. இதனால், தற்போது ஆரியாவின் 2.2 லிட்டர் வேரிகோர் டீசல் எஞ்சின் 150 எச்பி பவரையும், 320 என்எம் டார்க்கையும் அளிக்கும் சக்தி கொண்டதாக மேம்பட்டிருக்கிறது.

பேஸ் வேரியண்ட்

பேஸ் வேரியண்ட்

2 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட ப்யூர் பேஸ் வேரியண்ட்டில் பாடி டீகெல்ஸ், புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் நிரந்தர அம்சங்களாகியிருக்கின்றன. ரிமோட் கன்ட்ரோல் லாக்கிங், டிரைவர் இன்பர்மேஷன் சிஸ்டம், ரியர் ஏசி வென்ட்டுகள், சன் கிளாஸ் ஹோல்டர், எலக்ட்ரிக் கன்ட்ரோல் ரியர் வியூ கண்ணாடிகள், ஃபாலோ மீ ஹெட்லைட்டுகள் மற்றும் டிஸ்க் பிரேக்குகள் ப்யூர் வேரியண்ட்டில் இடம்பெற்றிருக்கும் சில முக்கிய அம்சங்களாகும்.

மிட் வேரியண்ட்

மிட் வேரியண்ட்

ப்ளெஷர் என்ற நடுத்தர மாடலும் 2 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது. இந்த வேரியண்ட்டில் டபுள் டின் ஸ்டீயரியோ சிஸ்டம், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், குளிர்சாதன வசதி கொண்ட கிளவ் பாக்ஸ், ரியர் வைப்பர் மற்றும் டிஃபாகர் ஆகியவை இடம்பெற்றிருக்கின்றன. பார்க்கிங் சென்சார், முன்புற ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவையும் உள்ளன. பாடி கலர் ரூஃப் ரெயில்களும் பொருத்தப்பட்டிருக்கின்றன.

டாப் வேரியண்ட்

டாப் வேரியண்ட்

ப்ரைடு என்ற டாப் வேரியண்ட் 4 வீல் டிரைவ் சிஸ்டத்துடன் கிடைக்கிறது. லெதர் அப்ஹோல்ஸ்டரி, சாட் நவ் நேவிகேஷன், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, க்ரூஸ் கன்ட்ரோல், ஹார்மன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், கருப்பு பூச்சு கொண்ட ஹெட்லைட்டுகள், முன்புறம், பக்கவாட்டுக்கான கர்ட்டெய்ன் ஏர்பேக்குகள், ஏபிஎஸ், இபிடி, இஎஸ்பி மற்றும் டிராக்ஷன் கன்ட்ரோல் போன்ற பாதுகாப்பு வசதிகள் கொடுக்கப்ட்டுள்ளன.

விலை

விலை

2014 மாடலாக வந்திருக்கும் டாடா ஆரியா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ப்யூர் என்ற பேஸ் மாடல் ரூ.9.95 லட்சம் விலையிலும், ப்ரைடு என்ற 4 வீல் டிரைவ் கொண்ட மாடல் ரூ.14.74 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 11, 2014, 11:29 [IST]
English summary
Tata Motors has launched the facelifted version of the Aria MPV without any hype. The 2014 Tata Aria receives minor changes which are hardly noticeable. These include new side decals and projector headlamps, even for the base variant.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+