2014 டொயோட்டா கரொல்லா கார் படங்கள் வெளியீடு
புதிய டொயோட்டா கரொல்லா காரின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் ஃபியூரியா கான்செப்ட் காராக அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது உற்பத்தி நிலை படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இளைய சமுதாய வாடிக்கையாளர்களை கவரும் வகையில், மிகவும் கவர்ச்சியான தோற்றத்துடன் புதிய கரொல்லா டிசைன் செய்யப்பட்டுள்ளது.
செடான் கார்களின் சொர்க்க பூமியாக கருதப்படும் அமெரிக்காவில் இந்த கார் இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வர உள்ளது. இதைத்தொடர்ந்து, அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் இந்த புதிய கரொல்லோ விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இந்த கார் கரொல்லா ஆல்டிஸ் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.
132 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் மேம்படுத்தப்பட்ட 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். 7 ஸ்பீடு சிவிடி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கும். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெட்ரோல் மாடலுடன் மட்டுமே கிடைக்கும். இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்படும் அதே எஞ்சின் மாடல்களிலே விற்பனைக்கு வரும். எல்இடி ஹெட்லைட்டுகள், 17 இஞ்ச் அலாய் வீல்கள் ஆகியவை புதிய கரொல்லாவுக்கு கூடுதல் மதிப்பு சேர்க்கின்றன.












Click it and Unblock the Notifications








