இந்தியாவில் புதிய டொயோட்டா பிராடோ விற்பனைக்கு வந்தது

By Saravana

இந்தியாவில் டொயோட்டாவின் புதிய லேண்ட க்ரூஸர் பிராடோ எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

உலக அளவில் மிகச் சிறந்த பிரிமியம் எஸ்யூவி மாடல்களில் ஒன்றாக டொயோட்டா பிராடோ பெயர் பெற்றுள்ளது. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் தற்போது தோற்றத்திலும், வசதிகளிலும் பிராடோ மேம்படுத்தப்பட்டுள்ளது.

 முன்பதிவு துவக்கம்

முன்பதிவு துவக்கம்

சிறந்த கட்டுமானம், பெர்ஃபார்மென்ஸ் கொண்ட இந்த பிரிமியம் எஸ்யூவிக்கு இன்று முதல் முன்பதிவு துவங்கியுள்ளது.

 தோற்றம்

தோற்றம்

தோற்றத்தில் மிக மிரட்டாலாக மாறியிருக்கும் புதிய பிராடாவில் எல்இடி ஹெட்லைட்டுகள், பகல் நேர ரன்னிங் விளக்குகள், புதிய பம்பர், பனி விளக்குகள் அறை டிசைன் ஆகிய அனைத்தும் புதிதாக மாறியுள்ளன. குறிப்பாக, முன்பக்க கிரில் செம கம்பீரமாக இருக்கிறது.

 எஞ்சின்

எஞ்சின்

புதிய பிராடோவில் 190 எச்பி ஆற்றலையும், 420 என்எம் டார்க்கையும் அளிக்கும் 2,982 சிசி டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டது.

அம்சங்கள்

அம்சங்கள்

வழுக்கு தரைகளிலும், கரடு முரடான சாலைகளில் செல்லும் Crawl Control System மூலமாக பிரேக் மற்றும் ஆக்சிலேட்டர் செயல்பாடுகளை கண்காணித்து கட்டுப்படுத்தும். டிரைவர் ஸ்டீயரிங்கில் மட்டுமே கவனம் செலுத்துவதற்கு உதவும். இதுதவிர, ஒவ்வொரு சாலை நிலைகளுக்கும் ஏற்பட டிரைவிங் ஆப்ஷனை மாற்றிக் கொள்ளும் மல்டி டெர்ரெய்ன் செலக்ட் ஆப்ஷன் உள்ளது. டயர் பிரஷர் மானிட்டர் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன.

 இன்டிரியர்

இன்டிரியர்

இன்டிரியர் மிகச் சிறப்பாக மேம்படுத்தப்பட்டுள்ளது. 7 அங்குல திரையுடன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், மரவேலைப்பாடுகள் என உள்புறம் மிக அலங்காரமாக இருக்கிறது.

 வண்ணங்கள்

வண்ணங்கள்

பியர்ல் ஒயிட், சில்வர் மெட்டாலிக், கிரே மெட்டாலிக், டார்க் புளூ மெட்டாலிக், கருப்பு ஆகிய 5 வண்ணங்களில் புதிய பிராடோ கிடைக்கும். இரண்டுவிதமான உட்புற வண்ணங்களிலும் தேர்வு செய்துகொள்ளலாம்.

 விலை

விலை

ரூ.84.87 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய லேண்ட் க்ரூஸர் பிராடோ எஸ்யூவி விற்பனைக்கு வந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, December 5, 2013, 17:15 [IST]
English summary
Japanese car maker Toyota has launched 2014 Land Cruiser Prado faceliftl in India at 84.87 lakhs.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+