ஃபோக்ஸ்வேகன் போலோ ஃபேஸ்லிஃப்ட் கார் விற்பனைக்கு வந்தது - விபரம்
ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த புதிய மாடல் ஷோரூம்களுக்கு வந்துவிட்டதால், இன்று மாலை முதல் டெலிவிரியும் துவங்குகிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் கூடுதல் எரிபொருள் சிக்கனம் கொண்டதாக புதிய போலோ கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், சில பெட்ரோல் வேரியண்ட்டுகள் முந்தைய மாடலைவிட குறைவான விலையில் வந்திருக்கின்றன. அதேவேளை, டீசல் வேரியண்ட்டுகளின் விலை சற்று தூக்கலாகவே வந்துள்ளது.

வெளிப்புறம்
ஃபோக்ஸ்வேகன் போலோ ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வெளிப்புறத்தை பொறுத்தவரை பம்பர், ஹெட்லைட் மற்றும் கிரில் டிசைன்கள் மாற்றம் கண்டுள்ளன. டெயில் லைட் டிசைனிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதோடு, புதிய அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வெப்பத் தடுப்பு வசதி கொண்ட கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் பின்புற வைன்ட்ஷீல்டு கொண்டுள்ளது.

இன்டிரியர்
ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், புளூடூத் கனெக்டிவிட்டி, 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல், புதிய ஏசி வென்ட்டுகள், கிளைமேட் கன்ட்ரோல் வசதி கூடுதல் அம்சங்களாக இடம்பெற்றுள்ளன.

மைலேஜ்
பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 16.47 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 20.15 கிமீ மைலேஜையும் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வசதிகள்
அனைத்து வேரியண்ட்டுகளிலும் ஏர்பேக்குகள் நிரந்தரமாக இடம்பெற்றிருக்கும். பேஸ் வேரியண்ட்டை தவிர்த்து பிற வேரியண்ட்டுகளில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உண்டு.

எஞ்சின்
பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் வந்துள்ளது. பெட்ரோல் மாடலில் 90 பிஎச்பி பவரையும், 230 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்டதாக கிடைக்கும். 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் இருவித ட்யூனிங் கொண்டதாக கிடைக்கும். 105 பிஎஸ் பவரையும், 175 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் ஒரு மாடலிலும், 75 பிஎஸ் பவரையும், 110 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் மற்றொரு பெட்ரோல் மாடலிலும் கிடைக்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டது.

விலை
போலோ 1.2 லி எம்பிஐ: ரூ.4.99 லட்சம் முதல் ரூ.6.07 லட்சம் வரை
போலோ 1.5 லி டிடிஐ: ரூ.6.27 லட்சம் முதல் ரூ.7.37 லட்சம் வரை
ஃபோக்ஸ்வேகன் கிராஸ் போலோ: ரூ.7.90 லட்சம்
ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி டிடிஐ: ரூ.7.99 லட்சம்
ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி டிஎஸ்ஐ: ரூ.7.99 லட்சம்
(அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை)

இதர போலோ மாடல்கள்
ஃபோக்ஸ்வேகன் போலோ ஃபேஸ்லிஃப்ட் தவிர்த்து கிராஸ் போலோ, போலோ ஜிடி டிஎஸ்ஐ மற்றும் போலோ ஜிடி டிடிஐ ஆகிய கார்களின் விற்பனை அடுத்த மாதம் துவங்கும் என ஃபோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








