புதுப்பொலிவுடன் விற்பனைக்கு வந்தது வால்வோ எஸ்80 சொகுசு கார்
வால்வோ எஸ்80 சொகுசு செடான் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டம் இல்லாமல் இந்த புதிய மாடலை வால்வோ நிறுவனம் இந்தியாவில் இறக்கியுள்ளது.
பிஎம்டபிள்யூ 5 சீரிஸ், மெர்சிடிஸ் பென்ஸ் இ கிளாஸ் கார்களுக்கு போட்டியாக வந்துள்ள இந்த புதிய மாடல் போட்டியாளர்களைவிட பணத்திற்கு மதிப்பு மிக்க மாடலாக கூறலாம். இந்த காரின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

டிசைன்
புதிய முகப்பு கிரில், ஹெட்லைட்டுகள், பனி விளக்குகள் மற்றும் பம்பர்கள் புதிய டிசைன் கொண்டதாக மாறியிருக்கிறது. ஹெட்லைட்டில் பகல் நேர ரன்னிங் விளக்குகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இதேபோன்று, பின்புறத்தில் டெயில் லைட்டுகள் மற்றும் பம்பரும் மாற்றங்களை சந்தித்துள்ளன. முன்புறத்தின் தோற்றத்தைவிட பின்புறத்தில் செய்யப்பட்டிருக்கும் மாற்றங்கள் ரசிக்கத்தக்கதாக இருக்கின்றன. புதிய அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இன்டிரியர்
டேஷ்போர்டு டிசைன் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. 7 இஞ்ச் டிஸ்ப்ளேவுடன் சென்ட்ரல் கன்சோல் வசீகரிக்கிறது. ஸ்டீயரிங் வீலில் மர வேலைப்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பெரும்பான்மையான பகுதிகளை கருப்பு நிறம் ஆக்கிரமித்துள்ளது.

எஞ்சின்
2014 மாடல் வால்வோ எஸ்80 சொகுசு காரில் 165 பிஎஸ் பவரையும், 400 என்எம் டார்க்கையும் அளிக்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 215 பிஎஸ் பவரையும், 440 என்எம் டார்க்கையும் அளிக்கும் 2.4 லிட்டர் 5 சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இரு மாடல்களிலும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இருக்கிறது.

பெர்ஃபார்மென்ஸ்
0 - 100 கிமீ வேகத்தை 7.8 வினாடிகளில் எட்டிவிடும் வல்லமை கொண்ட இந்த சொகுசு கார் அதிகபட்சமாக மணிக்கு 225 கிமீ வேகம் வலை செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள்
ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரொகிராம், டிராக்ஷன் கன்ட்ரோல், ஏர்பேக்குகள் போன்ற உயர் பாதுகாப்பு வசதிகள் இந்த காரில் இருக்கின்றன.

விலை
டி4 பேஸ் மாடல் ரூ.41.35 லட்சத்திலும், டி5 வேரியண்ட் ரூ.44.80 லட்சம் விலையிலும் வந்துள்ளன. கொடுக்கும் பணத்திற்கு சிறப்பான மதிப்பு கொண்ட காராக இருந்தாலும், இதன் டிசைன் அனைவரையும் கவரும் வகையில் இருக்காது.


Click it and Unblock the Notifications








