புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான் டூரிஷ்மோ கார் விற்பனைக்கு வந்தது
இந்தியாவில் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரின் புதிய கிரான் டூரிஷ்மோ மாடல் விற்பனைக்கு வந்துள்ளது. நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற ஓர் மிகச் சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய சொகுசு கார்.
டெல்லி ஆட்டோ எக்ஸ்போ மூலம் விற்பனைக்கு வந்துள்ள இந்த காரில் ஏராளமான சிறப்பம்சங்கள் இருக்கின்றன. அதுபற்றிய கூடுதல் விபரங்கள் மற்றும் படங்களை குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

வேரியண்ட்
தற்போது 3 சீரிஸ் ஜிடி கார் 320டி வேரியண்ட்டில் மட்டும் கிடைக்கும்.

எஞ்சின்
இந்த காரில் 184 எச்பி ஆற்றலையும் 380 என்எம் டார்க்கையும் அளிக்கும் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

பெர்ஃபார்மென்ஸ்
8 ஸ்பீடு ஸ்டெப்ட்ரோனிக் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கும் இந்த கார் 0-100 கிமீ வேகத்தை 7.9 வினாடிகளில் எட்டிவிடும். அதிகபட்சமாக மணிக்கு 226 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது.

டைனமிக் ரூஃப் ஸ்பாய்லர்
இந்த கார் 110 கிமீ வேகத்தை தாண்டும்போது, இதன் ரூஃப் ஸ்பாய்லர் தானியங்கி முறையில் இயங்க ஆரம்பித்துவிடும். இதன்மூலம், அதிவேகத்தில் காருக்கு சிறப்பான ஸ்டெபிளிட்டியை வழங்கும்.

பூட் ரூம்
இந்த காரில் 520 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் ரூம் இருக்கிறது. மேலும், பின்புற இருக்கையை 40/20/40 என்ற வகையில் மடக்கிக் கொள்ள முடியும். இதன்மூலம், பொருட்கள் வைப்பதற்கான இடவசதியை அதிகபட்சமாக 1,600 லிட்டர் வரை அதிகரித்துக் கொள்ள முடியும்.

வசதிகள்
இந்த காரில் பிஎம்டபிள்யூவின் ஐடிரைவ் இன் கார் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டிருக்கிறது. இதில், 16.5 செ.மீ கலர் திரை உள்ளது. புளூடூத், யுஎஸ்பி போர்ட்டுகள் உள்ளன. ரியர் வியூ கேமரா, பார்க் டிஸ்டன்ஸ் கன்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளும் உண்டு.

பாதுகாப்பு அம்சங்கள்
புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் ஜிடி ககாரில் 6 ஏர்பேக்குகள், டைனமிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டைனமிக் டிராக்ஷன் கன்ட்ரோல், கார்னரிங் பிரேக் கன்ட்ரோல், எலக்ட்ரானிக் வெகிக்கிள் இம்மொபைலஸர், கிராஷ் சென்சார், மோதலை உள்வாங்கி பயணிகளுக்கு பாதுகாப்பை வழங்கும் வசதிகள் உள்ளன.

சென்னையில் உற்பத்தி
சென்னையிலுள்ள பிஎம்டபிள்யூ ஆலையில்தான் இந்த புதிய கார் அசெம்பிள் செய்யப்படுகிறது. அடுத்த மாதம் டெலிவிரி துவங்க உள்ளது.

விலை
ரூ.42.75 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நாட்டின் எந்தப் பகுதியிலும் இந்த எக்ஸ்ஷோரூம் விலைதான் அடிப்படையாக எடுத்துக்கொள்ளப்படும்.


Click it and Unblock the Notifications








