சாதாரண நபர் போல் பெட்ரோல் பங்கை சோதனையிட்ட அமைச்சர்!! அடுத்து நடந்ததுதான் அதிரடியான விஷயம்...!

நம்மில் பெரும்பாலானோருக்கு எரிபொருள் நிலையத்தில் பெட்ரோல் நிரப்பி கொள்ளும்போது, நாம் கொடுக்கும் பணத்திற்கு சரியாக பெட்ரோல் நிரப்பப்படுகிறதா என்கிற சந்தேகம் எழும்பும். ஏனெனில் பெட்ரோல் பங்குகளில் முறைக்கேடுகள் நடைபெறுவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றன.

சாதாரண நபர் போல் பெட்ரோல் பங்கை சோதனையிட்ட அமைச்சர்!! அடுத்து நடந்ததுதான் அதிரடியான விஷயம்...!

இவ்வாறான ஒரு சம்பவத்தை பற்றி தான் இனி இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம். குஜராத் மாநிலம், சூரத் மாவட்டத்தில் முறைக்கேடாக செயல்பட்டுவந்த பெட்ரோல் நிலையத்திற்கு அதிரடியாக அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். இது தொடர்பான வீடியோவினை கீழே காணலாம்.

குஜராத் மாநில வேளாண்மைதுறை, ஆற்றல் & பெட்ரோல்துறை அமைச்சராக இருப்பவர், முகேஷ் படேல். ஓல்பட் என்கிற தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் முகேஷ் படேல் ஏகப்பட்ட எரிபொருள் நிலையங்களையும் நடத்தி வருகிறார். இவருக்கு இவரது தொகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட பெட்ரோல் பங்கின் மீது தொடர்ந்து புகார்கள் வர ஆரம்பித்துள்ளன.

சாதாரண நபர் போல் பெட்ரோல் பங்கை சோதனையிட்ட அமைச்சர்!! அடுத்து நடந்ததுதான் அதிரடியான விஷயம்...!

இதனை விசாரிக்க சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்கிற்கு நேரடியாக அமைச்சர் முகேஷ் பட்டேல் சென்றுள்ளார். ஆனால் அவர் சென்ற விதம் வேறு. சாதாரண குடிமகன் போல் வேடமிட்டவர் தனது சொந்த பயன்பாட்டு வாகனத்தில் கடந்த நவ.7ஆம் தேதி ஜெகன்கிர்புரா என்ற இடத்தில் உள்ள அந்த பெட்ரோல் பங்கிற்கு பெட்ரோல் நிரப்புவது போல் சென்றுள்ளார்.

சாதாரண நபர் போல் பெட்ரோல் பங்கை சோதனையிட்ட அமைச்சர்!! அடுத்து நடந்ததுதான் அதிரடியான விஷயம்...!

முதலில் உள்ளே நுழைந்தவுடனே, எரிபொருள் நிரப்பும் மெஷின் இயக்கத்தில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்த அமைச்சர், அதுகுறித்து எரிபொருள் நிரப்பும் பணியாளிடம் விசாரித்துள்ளார். இதற்கு அந்த நபர், அருகில் உள்ள மற்றொரு மெஷினில் உள்ள திரையினை சரி பார்த்து கொள்ளும்படி கூறியுள்ளார்.

சாதாரண நபர் போல் பெட்ரோல் பங்கை சோதனையிட்ட அமைச்சர்!! அடுத்து நடந்ததுதான் அதிரடியான விஷயம்...!

இது அமைச்சருக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியதை அடுத்து, உடனடியாக மாவட்ட கலெக்டர் ஆயுஷ் ஓக் அவர்களை பெட்ரோல் பங்கை வந்து சோதனை நடத்தும்படி அமைச்சர் போனில் அழைத்துள்ளார். அதன்பின் அமைச்சரின் ஆணைக்கிணங்க, மாவட்ட வழங்கல் துறை மற்றும் எடை & அளவீடு துறைகளை சேர்ந்த அதிகாரிகளுடன் சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்கிற்கு கலெக்டர் விரைந்துள்ளார்.

சாதாரண நபர் போல் பெட்ரோல் பங்கை சோதனையிட்ட அமைச்சர்!! அடுத்து நடந்ததுதான் அதிரடியான விஷயம்...!

சோதனை மேற்கொண்டதில் பயன்படுத்தப்பட்டு இருந்த முனைகள் தவறாக அளவீடு செய்யப்பட்டிருந்ததை கண்டறிந்தனர். மேற்கொண்டு விசாரித்ததில், முக்கியமாக பதிவு செய்ய வேண்டிய பதிவுகளையும் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் முறையாக பராமரிக்காததும் வெளிச்சத்திற்கு வந்தது.

சாதாரண நபர் போல் பெட்ரோல் பங்கை சோதனையிட்ட அமைச்சர்!! அடுத்து நடந்ததுதான் அதிரடியான விஷயம்...!

பிறகு இந்த சோதனைகளின்படி இந்த குறிப்பிட்ட பெட்ரோல் பங்கிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், எரிபொருள் நிலையம் பொது பயன்பாட்டில் இருந்து மூடப்பட்டதை தொடர்ந்து, இங்கு விநியோகிக்கப்பட்ட எரிபொருள்களின் மற்றும் செயல்பாடுகளை சோதனையிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.

சாதாரண நபர் போல் பெட்ரோல் பங்கை சோதனையிட்ட அமைச்சர்!! அடுத்து நடந்ததுதான் அதிரடியான விஷயம்...!

இதற்கிடையில்தான், முதலாவதாக சாதாரண நபரை போல் வந்து சோதனை செய்தது மாநில பெட்ரோலிய துறை அமைச்சர் என்பது பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்கும், டீலருக்கும் தெரியவந்தது. எரிபொருளுக்கான மத்திய அரசாங்கத்தின் ஜிஎஸ்டி குறைக்கப்பட்ட போதிலும், இந்த குறிப்பிட்ட பெட்ரோல் பங்கின் மீது வாடிக்கையாளர்கள் தொடர்ந்து புகார் தெரிவிக்க ஆரம்பித்தாக பிறகு அளித்த பேட்டியில் அமைச்சர் முகேஷ் பட்டேல் தெரிவித்தார்.

சாதாரண நபர் போல் பெட்ரோல் பங்கை சோதனையிட்ட அமைச்சர்!! அடுத்து நடந்ததுதான் அதிரடியான விஷயம்...!

இந்த புகார்களில் பெரும்பாலனவை, சரியான அளவில் இவர்கள் எரிபொருளை வழங்காதது தொடர்பானதாக இருந்ததாகவும் கூறிய அமைச்சர், சோதனை செய்ததில், ஒவ்வொரு லிட்டர் எரிபொருளுக்கும் 12 மில்லி லிட்டர்களை குறைவாக வழங்கிவந்தது உறுதிப்படுத்தப்பட்டதாகவும், அதனை தொடர்ந்தே தற்போது சீல் வைக்கபட்டுள்ளதாகவும் என்றார்.

சாதாரண நபர் போல் பெட்ரோல் பங்கை சோதனையிட்ட அமைச்சர்!! அடுத்து நடந்ததுதான் அதிரடியான விஷயம்...!

12 மில்லி லிட்டர்கள் என்பது 1 லிட்டருடன் (1000 மி.லி) ஒப்பிடுகையில் குறைவானதாக இருக்கலாம். ஆனால் தினந்தோறும் ஒரு பெட்ரோல் பங்கில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு சராசரியாக வழங்கப்படும் பெட்ரோல் அளவுடன் ஒப்பிட்டோமேயானால், மிக பெரியதாக வரும். இவ்வாறு சட்ட விரோதமாக சேமிக்கும் எரிபொருளை இவர்கள் சட்ட விரோதமான செயல்களுக்கும் பயன்படுத்துவதற்கு வாய்ப்புள்ளது.

சாதாரண நபர் போல் பெட்ரோல் பங்கை சோதனையிட்ட அமைச்சர்!! அடுத்து நடந்ததுதான் அதிரடியான விஷயம்...!

ஏனெனில் தற்போதைய காலத்தில் பெரும்பாலான பெட்ரோல் பங்குகளில் சிசிடிவி கேமிரா வந்துவிட்டது. ஆதலால் சட்ட விரோதமான செயல்களில் ஈடுப்படுவோருக்கு இவ்வாறான பெட்ரோல் & டீசல்கள் வழங்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது. சட்ட விரோதமாக இவ்வாறு எரிபொருள்களை திருடுவதினாலேயே இந்த பெட்ரோல் பங்கில் பதிவுகள் முறையாக பதிவு செய்யப்படவில்லை.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Gujarat petroleum minister seals fuel station due to fraudulent filled details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X