மும்பை தொழிலதிபரின் வசம் உள்ள இந்தியாவின் முதல் டைகன் எலக்ட்ரிக் கார்!! ஷோரூம் விலையே இத்தனை கோடியா!
இந்தியாவின் முதல் போர்ஷே டைகன் டர்போ எஸ் எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் மும்பையில் உலாவரும்போது காட்சி தந்துள்ளது. இதுகுறித்து இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவினை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பிரபலமான ஐரோப்பிய கார் தயாரிப்பு நிறுவனங்களான மெர்சிடிஸ்-பென்ஸ், ஆடி, பிஎம்டபிள்யூ, போர்ஷே மற்றும் ஜாகுவார் உள்ளிட்டவை கடந்த சில வருடங்களில் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் தன்னை உட்படுத்தி கொண்டுள்ளன. இந்த வகையில் போர்ஷே நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள அதன் முதல் எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் தான் டைகன் ஆகும்.

இதனை இந்திய வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யும் பணிகளையும் போர்ஷே நிறுவனம் ஏற்கனவே துவங்கிவிட்டது. போர்ஷே டைகனை முதல் ஆளாக மும்பையை சேர்ந்த தொழிலதிபரான தினேஷ் தக்கர் டெலிவிரி பெற்றுள்ளார். இவர் வாங்கி இருப்பது போர்ஷே டைகனின் டாப் டர்போ எஸ் வேரியண்ட் ஆகும். அதாவது இந்தியாவில் முதல் மாடலாகவே விலையுயர்ந்த போர்ஷே டைகன் கார் தான் டெலிவிரி செய்யப்பட்டுள்ளது.

இந்த 4-கதவு டர்போ எலக்ட்ரிக் காரினை தினேஷ் தக்கர் பச்சை மம்பா நிறத்தில் டெலிவிரி பெற்றுள்ளார். இந்த காரில் தினேஷ் தக்கர் மும்பை சாலையில் உலாவந்த போது எடுக்கப்பட்ட வீடியோ சிஎஸ்12 விலாக்ஸ் என்கிற யுடிடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ளது. அதனை கீழே காணலாம். இந்த வீடியோவில் டைகன் டர்போ எஸ் காரின் அசத்தலான சாலை இருப்பை காணலாம்.
விலைமிக்க ஸ்போர்ட்ஸ் காராக இருப்பினும், இந்த எலக்ட்ரிக் காரின் க்ரவுண்ட் க்ளியரென்ஸ் சிறப்பானதாக உள்ளது. இதனால் பெரிய வேகத்தடைகளை கொண்ட இந்திய சாலைகளுக்கும் இந்த மாடர்ன் போர்ஷே கார் ஏற்றதாக விளங்குகிறது. மிகவும் அட்வான்ஸான தோற்றத்தினை கொண்டிருக்கும் இந்த எலக்ட்ரிக் கார் இரட்டை-நிற பெயிண்ட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதாவது காரின் பெரும்பான்மையான உடற்பகுதி பச்சை நிறத்தில் இருக்க, மேற்கூரை மற்றும் பின்பக்கத்தை காட்டும் பக்கவாட்டு கண்ணாடிகள் உள்பட சில பாகங்கள் கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கூறியதுபோல், டைகன் போர்ஷேவின் முதல் எலக்ட்ரிக் சூப்பர்கார் ஆகும். இந்த 4-கதவு எலக்ட்ரிக் செடான் கார் உலகளவில் 2019இல் வெளியீடு செய்யப்பட்டது.

இந்தியாவில் இந்த எலக்ட்ரிக் கார் நான்கு விதமான வேரியண்ட்களில் இந்த 2022ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த 4 வேரியண்ட்களில் டைகன் பின்சக்கர ட்ரைவ், டைகன் 4எஸ், டைகன் டர்போ மற்றும் டைகன் டர்போ எஸ் என்பவை அடங்குகின்றன. எலக்ட்ரிக் காரில் டர்போ வேரியண்ட்டா என்கிற சந்தேகம் இந்நேரம் உங்களுக்கு எழுந்திருக்கலாம்.

டைகனின் டர்போ எஸ் வேரியண்ட் ஆனது அதன் பெயருக்கு ஏற்ப எந்தவொரு டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜினையும் பெறுவதில்லை. மாறாக, முன் மற்றும் பின்பக்கத்தில் எலக்ட்ரிக் மோட்டார்கள் உடன் அனைத்து-சக்கர-ட்ரைவ் அமைப்பை பெறுகிறது. இவற்றின் மூலமாக 761 பிஎஸ் மற்றும் 1050 என்எம் டார்க் திறன் வரையில் அதிகப்பட்சமாக பெறலாம். இத்தகைய இயக்க ஆற்றல் தற்சமயம் ஆற்றல்மிக்க டர்போ என்ஜின் கார்களில்தான் கிடைக்கிறது.

இதன் மூலமாக உலகிலேயே மிகவும் ஆற்றல்மிக்க எலக்ட்ரிக் சூப்பர் காராக டைகன் விளங்குகிறது. போர்ஷே டைகன் டர்போ எஸ் காரின் அதிகப்பட்ச வேகம் மணிக்கு 260கிமீ ஆகும். இந்த இ-காரில் 0-100kmph வேகத்தை வெறும் 2.8 வினாடிகளில் எட்டிவிடலாம். இத்தகைய அளவீடுகளை சில விலையுயர்ந்த எரிபொருள் என்ஜின் சூப்பர்கார்களில் கூட தற்போதைய காலக்கட்டத்தில் எதிர்பார்க்க முடிவதில்லை.

டைகன் டர்போ எஸ் எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.29 லட்சமாக உள்ளது. அதேநேரம் டைகனின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.5 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மும்பை தொழிலதிபர் தினேஷ் தாக்கர் இந்தியாவில் முதல் ஆளாக இந்த எலக்ட்ரிக் காரினை கடந்த பிப்ரவரி மாதத்தில் டெலிவிரி பெற்றார். பச்சை மம்பா மெட்டாலிக் நிறத்தில் வெளிப்புறத்தில் பெயிண்ட் செய்யப்படும் இந்த போர்ஷே எலக்ட்ரிக் காரின் உட்புற கேபின் பழுப்பு நிறத்தில் அலங்கரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

டைகனை பொறுத்தவரையில், இது மற்ற எந்தவொரு போர்ஷே காருடனும் ஒத்துப்போகாத தனித்துவமான காராகும். முன்பக்கத்தில் எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் டிஆர்எல் செட்அப்பை பெறும் இந்த எலக்ட்ரிக் காரின் பின்பக்கத்தில் முழு அகலத்தில் எல்இடி ஸ்ட்ரிப் வழங்கப்படுவது கூடுதல் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. இதன் டர்போ வேரியண்ட்களில் பொருத்தப்படும் 93.4kWh பேட்டரியை விரைவு சார்ஜர் மூலம் 9 மணிநேரங்களில் 0-வில் இருந்து முழுவதுமாக சார்ஜ் நிரப்பிவிடலாம்.


Click it and Unblock the Notifications








