எந்த ஊரு தங்கமுங்க இவங்க.. அப்பா, மாமனார் 2பேருக்கும் காரை பரிசா தந்திருக்காங்க.. இந்த காரு பரிசா!!
ஓர் பெண் தன்னுடைய அப்பா மற்றும் மாமனார் இரண்டு பேருக்கும் ஒரே நேரத்தில் காரை பரிசாக வழங்கி அவர்களை ஆச்சரியப்படுத்தி அசத்தி இருக்கின்றார். இந்த சம்பவம் குறித்தும், அவர் என்ன மாதிரியான கார் மாடல்களை பரிசாக வழங்கி இருக்கின்றார்? என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.
டாடா நெக்ஸான் மற்றும் டாடா அல்ட்ராஸ் கார்களையே அந்த பெண் பரிசாக வழங்கி இருக்கின்றார். இந்த இரண்டும் இந்தியாவின் மிகவும் சிறந்த மற்றும் பாதுகாப்பு திறன்மிக்க கார் மாடல்கள் ஆகும். குறிப்பாக, டாடா நெக்ஸான் பாதுகாப்பு தருவதில் பெயர்போன கார் மாடலாக இருக்கின்றது. அதற்கு சற்றும் சளைத்தத அல்ல அல்ட்ராஸ்.

அல்ட்ராஸ் ஓர் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த ஹேட்ச்பேக் ரக கார் மாடல் ஆகும். நெக்ஸான் எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இந்த டாடா கார்களே சர்ப்ரைஸாக கிஃப்ட் செய்யப்பட்டு உள்ளது. சமீப காலமாக கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் பரிசளிக்கும் சம்பவங்கள் இந்தியாவில் அதிகளவில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
சில நாட்களுக்கு முன்னர்கூட ஓர் இளம் பெண் தன்னுடைய அப்பாவிற்கு ராயல் என்பீல்டு ஃபைக்கை பரிசாக வழங்கி அவரை ஆச்சரியப்படுத்தினார். ஆனால், தற்போது அரங்கேறி இருக்கும் இந்த நிகழ்வு மற்ற அனைத்து பரிசளிப்பு நிகழ்வையும் தூக்கி சாப்பிடும் வகையில் அமைந்து உள்ளது.
பொதுவாக பரிசளிப்பு என்பது கணவன் மனைவிக்கும் அல்லது மனைவி கணவனுக்கும் அல்லது பெற்றோர்கள் பிள்ளைகளுக்கும் அல்லது பிள்ளைகள் பெற்றோர்களுக்கும் இவ்வாறு இவர்களுக்குள்ளாக வழங்கிக் கொள்வதை நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம், பார்த்தும் இருக்கினஅறோம். ஆனால், இங்கு அப்பா, அப்பா ஸ்தானத்தில் இருக்கும் மாமனார் இருவர்களுக்கும் காரை பெண் பரிசாக வழங்கி இருக்கின்றார்.
எனவேதான் இந்த பரிசளிப்பு சம்பவம் தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, இந்த இளம் பெண்ணுக்கு பலர் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். தன் குடும்பத்தை மட்டுமே அதிக அக்கறையுடன் பார்த்துக் கொள்ளும் பெண்கள் இருக்கும் இந்த காலகட்டத்தில் இப்படி ஒரு பெண்ணா என்றே பலர் அவரை பார்த்து ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
டாடா நெக்ஸான், ஓர் 5 நட்சத்திரங்கள் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற கார் மாடல் ஆகும். 8.01 லட்சம் ரூபாய்க்கும் அதிமான விலையில் இருந்து இந்த கார் விற்கப்படுகின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். 1.2 லிட்டர் டர்போ சார்ஜட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் மோட்டார் ஆப்ஷன்களே இந்த காரில் வழங்கப்படுகின்றது.
டீசல் ஏஎம்டி வசதிக் கொண்ட நெக்ஸான் ஒரு லிட்டருக்கு 24.01 கிமீ வரையிலும், டீசல் மேனுவல் நெக்ஸான் ஒரு லிட்டருக்கு 23.23 கிமீ மைலேஜையும் வழங்கும். இதேபோல், பெட்ரோல் மேனுவல் கியர்பாக்ஸ் வசதிக் கொண்ட நெக்ஸான் ஒரு லிட்டருக்கு 17.01 கிமீ மைலேஜையும், ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட பெட்ரோல் நெக்ஸான் 17.44 கிமீட்டர் மைலேஜை தரும்.
அல்ட்ராஸ் இந்தியாவில் ரூ. 6.64 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதுவும் அதிக பாதுகாப்பு திறன் மிக்க கார் மாடல் ஆகும். இதுவும் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற கார் மாடலே என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரை பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி தேர்வுகளில் வாங்கிக் கொள்ள முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பரிசளிக்க மிக உகந்த கார் மாடல்கள் இவை ஆகும். அதிக பாதுகாப்பையும், அதிக பிரீமியம் அம்சங்களையும் மற்றும் சிறந்த மைலேஜையும் இந்த கார்கள் வழங்கும் என்பதால் பரிசளிக்க தகுந்த கார்களாக இருக்கின்றன. இந்தியாவில் இந்த இரண்டு கார்களுக்கும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, நெக்ஸான் மிக சிறப்பாக விற்பனையாகும் எஸ்யூவி காராக காட்சியளிக்கின்றது.


Click it and Unblock the Notifications








