நீண்ட கால உழைப்புக்கு கிடைத்த வெற்றி... 56 வயதில் பென்ஸ் காரை வாங்கிய பிரபல திரைப்பட இயக்குனர்!!

சினிமா பிரபலங்கள் என்றாலே அவ்வப்போது விலையுயர்ந்த கார் & பைக்குகளை வாங்குவார்கள் என்பதை பல நிகழ்வுகளில் பார்த்துள்ளோம். அந்த வரிசையில், இந்திய அளவில் வெற்றி படம் கொடுத்த இயக்குனர் ஒருவர் ரூ.1.37 கோடி மதிப்பிலான பென்ஸ் காரை வாங்கியுள்ளார். அதுதொடர்பான படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. இந்த படங்களில், அந்த இயக்குனர் காரை டெலிவிரி பெறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. யார் அந்த இயக்குனர் என்பதையும், அவர் வாங்கியுள்ள பென்ஸ் காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம், வாங்க.

பாலிவுட்டில் திரைக்குவந்து இந்தியா முழுவதும் கவனத்தை பெற்ற திரைப்படங்கள் ஏகப்பட்டவை உள்ளன. அத்தகைய திரைப்படங்களுள் ஒன்றுதான் ஸ்கேம் 1992 ஆகும். திரைப்படம் என கூறுவதை காட்டிலும், இது ஒரு வெப் சீரிஸ் ஆகும். 1992ஆம் ஆண்டில் நாடு தழுவிய அளவில் நடைபெற்ற மோசடியை கூறும் வெப் சீரிஸாக ஸ்கேம் 1992 ஓடிடி தளங்களில் திரைக்கு வந்தது. இந்த படத்தை இயக்கியவர், ஹன்சல் மெஹ்தா (Hansal Mehta).

hansal mehta buys mercedes-benz gls

அலிகார்க், லூடேரே, ஃபராஸ், ஒமெர்டா மற்றும் ஸ்கூப் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்தவர் ஹன்சல் மெஹ்தா ஆவார். இன்னும் சொல்லப் போனால், ஷாகித் திரைப்படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான தேசிய திரைப்பட விருதை வென்றவர். ஸ்கேம் 1992 வெப் சீரிஸுக்காகவும் ஃப்லிம்ஃபேர் ஒடிடி விருதை ஹன்சல் மெஹ்தா பெற்று இருந்தார்.

இந்த அளவிற்கு புகழ்பெற்றவராக விளங்கும் ஹன்சல் மெஹ்தா புதியதாக மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.எஸ் (Mercedes-Benz GLS) காரை சொந்தமாக்கி உள்ளார். ஹன்சலின் வீட்டிற்கே வந்து ஜி.எல்.எஸ் காரின் சாவியை டீலர்ஷிப் அதிகாரிகள் வழங்கும் படங்கள் ஆட்டோஹேங்கர் என்பவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், காரை டெலிவிரி கொடுக்கும்போது கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர்.

hansal mehta buys mercedes-benz gls

இயக்குனர் ஹன்சல் மெஹ்தா வாங்கியுள்ள மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.எஸ் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-கிளாஸ் காரின் வகுப்பை சேர்ந்த ஒரு லக்சரி கார் ஆகும். மாடர்ன் கார் என்பதால், ஜி.எல்.எஸ் காரில் மாடர்ன் தொழிற்நுட்பங்களுக்கும், சவுகரியமான வசதிகளுக்கும் எந்தவொரு குறையும் கிடையாது. கட்டிங்-எட்ஜ் தொழிற்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த காரில் 3 வரிசைகளில் இருக்கைகள் வழங்கப்படுகின்றன.

காருக்குள் டேஸ்போர்டில் அதிக எண்ணிக்கையில் திரைகள், ஹை-எண்ட் ஆடியோ சிஸ்டம், மெர்சிடிஸின் நவீன ஆப்ரேட்டிங் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இயக்குனர் ஹன்சல் மெஹ்தா வாங்கியுள்ள மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.எஸ்450 4மேட்டிக் காரில் 3.0 லிட்டர் 6-சிலிண்டர் டர்போ டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 362 பிஎச்பி மற்றும் 750 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

hansal mehta buys mercedes-benz gls

இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸின் விலையுயர்ந்த காராக விளங்கும் இதில் 4மேட்டிக் ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இந்த காரில் 0-இல் இருந்து 100kmph வேகத்தை வெறும் 6.1 வினாடிகளில் எட்டிவிட முடியும். 5.2 மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட இந்த பென்ஸ் காரில் முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் 2.78 மீட்டர்கள் ஆகும்.

மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.எஸ் கார் இந்தியாவில் பெட்ரோல் என்ஜின் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் என்ஜின் உடன் இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.1.32 கோடியாகவும், டீசல் என்ஜின் உடன் ரூ.1.37 கோடியாகவும் உள்ளது. அப்சிடியன் கருப்பு, சோடாலைட் நீலம், செலெனைட் சில்வர், ஹை-டெக் சில்வர் மற்றும் போலார் வெள்ளை என மொத்தம் 5 விதமான பெயிண்ட் ஆப்ஷன்களில் இந்த பென்ஸ் கார் விற்பனை செய்யப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தொகுப்பில் நாங்கள் குறிப்பிட்டுள்ளவை எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். ஆன்-ரோடு விலை எப்படியிருந்தாலும் ரூ.2 கோடி என்கிற அளவில் வரும். இது மிடில்-கிளாஸ் மக்களை பொறுத்தவரையில் அதிகப்படியான விலை என்றாலும், ஹன்சல் மொஹ்தா போன்ற பாலிவுட் இயக்குனர்களுக்கு பெரிய விஷயமாகவே இருக்காது.

More from DriveSpark

Article Published On: Monday, August 12, 2024, 16:33 [IST]
English summary
Hansal mehta buys mercedes benz gls luxury car check all details here
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X