யூடியுப் சேனல் நடத்துபவரின் காஸ்ட்லீயான பென்ஸ் கார் - விலையை பார்த்தால் தலையே சுத்துது!!
ஷாரீக் சாம்சுதீன் (Sharique Samsudheen), கேரளாவை சேர்ந்த பிரபலமான யூடியுப்பர். இவர் புதியதாக விலையுயர்ந்த மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.எஸ் (Mercedes-Benz GLS) காரை வாங்கியுள்ளார். யார் இந்த ஷாரீக் சாம்சுதீன்? இவர் வாங்கியுள்ள புதிய பென்ஸ் காரின் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
நிதி நிறுவன பங்குகளில் முதலீடு செய்ய நம் இந்திய மக்களும் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர். ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்வது சில மார்க்கெட் சவால்களை கொண்டிருப்பினும் பெரும்பாலானோருக்கு நல்ல வருவாயை வழங்கக்கூடியதாக உள்ளதால், நிதி நிறுவன பங்குகளில் நிறைய பேர் முதலீடு செய்கின்றனர். இதன் மூலமாக குறுகிய காலத்தில் அதிக வருவாயை பெற்றவர்கள் ஏராளம்.

அத்தகையவர்களுள் ஒருவர் தான் கேரளாவை சேர்ந்த ஷாரீக் சாம்சுதீன். பொருளாதார நிபுணராக விளங்கும் ஷாரீக் சாம்சுதீன், யூடியுப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதாவது, பொருளாதாரம் சார்ந்த மற்றும் நிதி நிறுவன பங்குகளில் முதலீடு செய்வது தொடர்பான தனது விளக்கங்களை வழங்குவதற்காகவே ஒரு யூடியுப் சேனலை நடத்தி வருகிறார்.
இவரது யூடியுப் சேனலுக்கு சுமார் 13.6 லட்ச சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். மேலும், இன்ஸ்டாகிராமிலும் ஷாரீக் சாம்சுதீன் பிரபலமானவராக விளங்குகிறார். இந்த நிலையில், புதியதாக மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.எஸ் என்கிற விலையுயர்ந்த லக்சரி எஸ்யூவி காரை ஷாரீக் சாம்சுதீன் வாங்கியுள்ளார். இவர் வாங்கியிருப்பது ஜி.எல்.எஸ் காரின் 400டி என்கிற டீசல் வேரியண்ட் ஆகும்.

புதிய கார் வாங்கியிருப்பதையும் வீடியோவின் மூலமாக ஷாரீக் சாம்சுதீன் வெளி உலகத்திற்கு தெரிவித்துள்ளார். இவரிடம் ஏற்கனவே பிஎம்டபிள்யூ எக்ஸ்5 என்கிற லக்சரி எஸ்யூவி கார் உள்ளது. புதிய மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.எஸ் எஸ்யூவி காரை 'KL 61 F 9999' என்கிற ஃபேன்சி நம்பர் பிளேட் உடன் ஷாரீக் வாங்கியுள்ளார். இந்த நம்பர் பிளேட்டிற்காகவே சில இலட்ச ரூபாய்களை அதிகமாக செலுத்த வேண்டியிருக்கும்.
மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.எஸ் 400டி காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது தற்சமயம் ரூ.1.37 கோடியாக உள்ளது. கேரளாவில் இந்த காரின் ஆன்-ரோடு விலை ரூ.1.74 கோடி ஆகும். அப்டேட் செய்யப்பட்ட ஜி.எல்.எஸ் கார் கடந்த ஜனவரி மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் இந்த பென்ஸ் கார் கிடைக்கிறது.

இந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஜி.எல்.எஸ் காரில் முக்கிய அம்சமாக காரின் முன்பக்க க்ரில் மாற்றப்பட்டுள்ளது. இதனால், ஜி.எல்.எஸ் கார் முன்பு இருந்ததை காட்டிலும் லக்சரியான தோற்றத்தில் காட்சியளிக்கிறது. அதேபோல், காரின் முன்பக்க பம்பரின் டிசைனும் மாற்றப்பட்டுள்ளது. முன்பு இருந்ததை காட்டிலும், ஜி.எல்.எஸ் காரில் அளவில் நன்கு பெரியதான அலாய் சக்கரங்கள் பொருத்தப்படுகின்றன.
காருக்கு உள்ளே புதிய டிசைனிலான ஸ்டேரிங் சக்கரம் பொருத்தப்படுகிறது. அதேபோல், புதிய எம்பக்ஸ் இண்டர்ஃபேஸ் மற்றும் விரல்ரேகை டெலிமேட்டிக்ஸ் சென்சார் உள்ளிட்டவற்றையும் ஜி.எல்.எஸ் கார் பெறுகிறது. ஜி.எல்.எஸ் பெட்ரோல் காரில் 3.0 லிட்டர் 6-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜினும், டீசல் வேரியண்ட்டில் 3.0 லிட்டர் 6-சிலிண்டர் டீசல் என்ஜினும் பொருத்தப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: யூடியூப் சேனல் நடத்திவரும் ஒருவர் விலையுயர்ந்த மெர்சிடிஸ்-பென்ஸ் காரை வாங்கியிருக்கிறார் என்றால் நம்பவே முடியவில்லை. நிச்சயமாக, ஷாரீக் சாம்சுதீனுக்கு வேறொரு வழியில் இருந்து வருவாய் கிடைக்கிறது. மார்க்கெட்டிற்கு புதிய பென்ஸ் காரை வாங்கி இருப்பதில் இருந்து, ஷாரீக் சாம்சுதீன் தொடர்ந்து அப்டேட்டில் இருக்கிறார் என்பதை அறிய முடிகிறது.


Click it and Unblock the Notifications









