இந்தியாவில் புதிய ஹைபிரிட் காரை விற்பனைக்கு கொண்டு வந்த பிஎம்டபிள்யூ!
இந்தியாவில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் முதல் ஹைபிரிட் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. குர்கானில் உள்ள பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலரான பேர்டு ஆட்டோமேட்டிவ் நிறுவனத்தின் ஷோரூமில் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டது.
ஏற்கனவே, விற்பனையில் இருந்து வரும் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரின் ஹைபிரிட் மாடல்தான் இது. பிஎம்டபிள்யூ ஆக்டிவ்ஹைபிரிட் 7 என்ற பெயரில் விற்பனைக்கு வந்திருக்கும் இந்த புதிய கார் விற்பனையில் எந்தளவு வரவேற்பை பெறுகிறது என்பதை பொறுத்து எதிர்காலத்தில் ஹைபிரிட் கார்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கூடுதல் தகவல்கள்
கூடுதல் தகவல்கள் மற்றும் படங்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

இறக்குமதி மாடல்
இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும். சென்னை, மும்பை மற்றும் டெல்லி உள்ளடக்கிய என்சிஆர் பகுதியிலுள்ள டீலர்களில் இன்றுமுதல் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசைன்
பிஎமட்பிள்யூ 7 சீரிஸ் காருக்கும், இந்த புதிய ஹைபிரிட் மாடலுக்கும் தோற்றத்தில் வித்தியாசங்கள் இருக்காது.

எஞ்சின்
இந்த காரில் 6 சிலிண்டர் கொண்ட 320 எச்பி ஆற்றலையும், 450 என்எம் பவரையும் அளிக்கும் 3.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். அதற்கு உதவியாக 55 எச்பி பவரையும், 210 என்எம் டார்க்கையும் அளிக்கும் மின் மோட்டாரும் உள்ளது. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டது.

செயல்திறன்
இந்த கார் 0- 100 கிமீ வேகத்தை 5.7 வினாடிகளில் எட்டிவிடும். அதிகபட்சமாக மணிக்கு 250 கிமீ வேகத்தில் செல்லும். இந்த கார் குறைந்த புகை வெளியிடும் தன்மை கொண்டது. சாதாரண பெட்ரோல் மாடலைவிட இது கூடுதல் மைலேஜையும் வழங்கும்.

சிறப்பம்சங்கள்
நப்பா லெதர் அப்ஹோல்ஸ்டரி, ஜிபிஎஸ் வசதி, 25.9 செமீ எச்டி திரை, பிஎம்டபிள்யூ கனெக்ட் டிரைவ் நுட்பம், பின் இருக்கை பயணிகளுக்கான இரண்டு திரைகள் என ஏராளமான சிறப்பம்சங்களையும், தொழில்நுட்ப வசதிகளையும் கொண்டுள்ளது.

விலை
இந்தியாவில் ரூ.1.35 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








