அமேஸ் செடானை சக்சஸ் செய்ய ஹோண்டாவின் வியூகங்கள் என்ன?
அமேஸ் செடானை வெற்றி பெற வைப்பதில் ஹோண்டா முழு மூச்சோடு இறங்கியிருக்கிறது. ஏனெனில், அமேஸை வைத்துத்தான் ஹோண்டாவின் எதிர்கால வளர்ச்சியே இருக்கிறது.
இந்த நிலையில், அமேஸ் வெற்றி பெற மார்க்கெட் லீடராக இருக்கும் மாருதி டிசையரின் மார்க்கெட்டை உடைத்தால்தான் முடியும். எனவே, அதற்கு தகுந்தாற்போல் தற்போது வியூகங்களை வகுத்து வருகிறது ஹோண்டா.

வாடிக்கையாளர்களுக்கு மனநிறைவு தரும் வகையில் அமேஸ் காருக்கு உடனடியாக சர்வீஸ் செய்து கொடுக்க ஹோண்டா முடிவு செய்துள்ளது. மேலும், 2 ஆண்டுகளுக்கான பராமரிப்பு திட்டத்தையும், 40,000 கிலோமீட்டருக்கான நீட்டிக்கப்பட்ட வாரண்டியையும் வழங்க உள்ளது.
இதன்மூலம், குறைந்த பராமரிப்பை உறுதி செய்ய முடியும் என்று ஹோண்டா தெரிவித்துள்ளது. 4 மீட்டருக்கும் குறைவான காராக வர இருப்பதால் வரிச்சலுகை பெற முடியும் என்பதால் டிசையருக்கு சவால் கொடுக்கும் விலையில் அமேஸை அறிமுகம் செய்யவும் ஹோண்டா திட்டமிட்டுள்ளது.
அதிக மைலேஜ், சிறந்த தரம், டீசல் எஞ்சின் ஆகிய பல கவர்ச்சிகர அம்சங்களுடன் வர இருக்கும் அமேஸ் கார் தற்போது ஆட்டோமொபைல் துறையின் ஹாட் டாப்பிக்காக மாறியிருக்கிறது. வாடிக்கையாளர்களுக்கும்தான்...!!


Click it and Unblock the Notifications








