சென்னையில் அசோக் லேலண்ட் ஸ்டைல் அறிமுகம்!
நிசான் எவாலியாவின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட அசோக் லேலண்ட் ஸ்டைல் எம்பிவி கார் நேற்று சென்னையில் நடந்த விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. நிசான் - ரெனோ கூட்டு நிறுவனத்தின் சிஇஓ கார்லோஸ் கோஸன் மற்றும் ஹிந்துஜா குழும தலைவர் ஜி.பி. ஹிந்துஜா ஆகியோர் இந்த புதிய காரை அறிமுகம் செய்தனர்.
தற்போது விற்பனையில் இருக்கும் நிசான் எவாலியா காரில் இருக்கும் குறைகளை களைந்து இந்த புதிய காரை அசோக் லேலண்ட் அறிமுகம் செய்துள்ளது. அதாவது, விரைவில் வர இருக்கும் புதிய எவாலியா காரில் இருக்கும் அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்டைல் அறிமுகம்
ஸ்டைலை அறிமுகம் செய்த ஹிந்துஜா குழுமத் தலைவர் ஜி.பி.ஹிந்துஜா மற்றும் நிசான் - ரெனோ கூட்டு நிறுவனத் தலைவர் கார்லோஸ் கோஸன்.

எஞ்சின்
இந்த எம்பிவி கார் டீசல் மற்றும் சிஎன்ஜி மாடல்களில் கிடைக்கும்.

மாற்றங்கள்
முகப்பு கிரில், ஹெட்லைட் டிசைன் மாற்றம் கண்டுள்ளது. நிசான் எவாலியாவில் குறைகளாக இருந்த பின்புற பட்டர்ஃப்ளை கண்ணாடி ஜன்னலுக்கு பதில் ஸ்லைடர் கண்ணாடி ஜன்னல்களும், 2வது வரிசையில் பெஞ்ச் இருக்கைகளுக்கு இரண்டு பக்கெட் இருக்கைகளும் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

வர்த்தக மார்க்கெட்
ஓட்டல்கள், ஆம்புலன்ஸ், வர்த்தக பயன்பாடுகளுக்கு ஏற்ற மாடல்களில் புதிய ஸ்டைல் விற்பனைக்கு வர இருக்கிறது.

விற்பனை
பண்டிகை காலம் துவங்குவதற்கு முன்னதாக இந்த காரை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு அசோக் லேலண்ட் திட்டமிட்டுள்ளது.

எவாலியாவுக்கு பாதிப்பா?
"அசோக் லேலண்ட்டுக்கும், நிசானுக்கும் வேறு வேறு வாடிக்கையாளர் பின்புலத்தை கொண்டுள்ளன. எனவே, ஸ்டைலால் எவாலியாவுக்கு பாதிப்பு இருக்காது," என நிசான் துணைத் தலைவர் ஆண்டி பால்மர் கூறினார்.


Click it and Unblock the Notifications








